அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
தெலுங்கு சினிமாவின் முக்கியமான சினிமா குடும்பம் அல்லு குடும்பம். தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகரான அல்லு ராமலிங்கய்யாவின் வாரிசுகள் இப்போது தெலுங்கு சினிமாவில் முன்னணியில் இருக்கிறார்கள். அல்லு அர்ஜூன், அவரது தம்பி அல்லு அரவிந்த் ஆகியோர் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் அல்லு குடும்பத்தினர் ஹைதராபாத் அவுட்டர் ரிங் ரோடு அருகே "அல்லு ஸ்டுடியோஸ்" என்ற பெயரில் திரைப்பட ஸ்டுடியோ ஒன்றை கட்டி முடித்துள்ளனர். இரண்டு வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட இதன் பணிகள் முடிந்து தற்போது திறப்புக்கு தயாராகி விட்டது.
அல்லு ராமலிங்கய்யாவின் நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி, வருகிற அக்டோபர் 1ம் தேதி இதன் திறப்பு விழா நடக்கிறது. திறப்பு விழாவுக்கு பிறகு முதல் படப்பிடிப்பாக அல்லு அரவிந்த் நடிக்கும் 'புஷ்பா' படத்தின் இரண்டாவது பாக காட்சிகள் இங்கு படமாக்கப்படுகிறது.