ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

சினிமாவில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு லட்சியம், கனவு இருக்கும். அதை அவர்கள் அடையும் போது அவர்களைச் சுற்றியுள்ளவர்களும் மகிழ்ச்சியடைவார்கள். அப்படி ஒரு சந்தோஷமல்ல, டபுள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள் ஜெயம் ரவி குடும்பத்தினர். முதல் சந்தோஷம், மணிரத்னம் இயக்கத்தில் முதல் முறையாக நடிப்பது, 'பொன்னியின் செல்வன்' படத்தில் டைட்டில் ரோலில் நடிப்பது என ஜெயம் ரவிக்கு அமைந்துள்ளது. வரும் வாரம் செப்டம்பர் 30ம் தேதி அப்படம் வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவின் மதிப்பு மிக்க ஒரு படமாக இப்படம் உருவாகியுள்ளது.
இரண்டாவது சந்தோஷம் ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜா, தெலுங்குத் திரையுலகின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவியை இயக்கியிருப்பது. அந்தக் கூட்டணியின் படமான 'காட் பாதர்' தெலுங்குப் படம் அக்டோபர் 5ம் தேதி வெளியாக உள்ளது. அதனால், இந்த வருட விஜயதசமி ஜெயம் ரவி குடும்பத்தினருக்கு டபுள் சந்தோஷத்துடன் மறக்க முடியாத ஒரு நாளாக அமையப் போகிறது.
தமிழில் 'பொன்னியின் செல்வன்' படமும், தெலுங்கில் 'காட் பாதர்' படமும் இந்த வருடத்தின் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்கள்.
ஜெயம் ரவி, மோகன் ராஜாவின் அப்பா எடிட்டர் மோகன் ஒரு தயாரிப்பாளர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஜெயம் ரவியின் மாமியாரும் ஒரு தயாரிப்பாளர். ஜெயம் ரவி, மோகன் ராஜா சார்ந்த உறவினர்கள், குடும்பத்தார் அனைவருக்கும் இரண்டு படங்களும் வெற்றி பெற்றால் பெரும் சந்தோஷமாக அமையும்.