‛குட் பேட் அக்லி' : இளமை தோற்றத்திற்கு திரும்பும் அஜித் | தீபாவளிக்கு வெளியாகும் கவின் படம் | கனா தர்ஷனின் புதிய பட அறிவிப்பு | இளம் நாயகிகளும் பொறாமைப்படும் 'மார்கண்டேயினி' த்ரிஷா | தமிழ் ரசிகர்களைக் கவராத 'புஷ்பா… புஷ்பா…' | 'சலார்' டிவி ஒளிபரப்பு : அதிர்ச்சி தந்த டிஆர்பி ரேட்டிங் | யஷ் படத்திலிருந்து கரீனா கபூர் விலகல்? | அண்ணாமலை பயோபிக் : தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆர்வம் | ப்ளடி பெக்கராக மாறிய கவின் | மகள் திருமணம் : ஆனந்த கண்ணீரில் ஜெயராம் |
கடந்த மே மாதம் வெளியான படம் ரங்கா. டி.எல்.வினோத் இயக்கிய இந்த படத்தில் சிபி சத்யராஜ், நிகிலா விமல், சதீஷ், ரேணுகா, மனோபாலா உள்பட பலர் நடித்திருந்தார்கள். ராம்ஜீவன் இசை அமைத்திருந்தார், அர்வி ஒளிப்பதிவு செய்திருந்தார்.
மகிழ்ச்சியாக பொழுதுபோக்க மணாலிக்குச் செல்லும் புதுமணத் தம்பதி எதிர்கொள்ளும் பிரச்சினையை பற்றிய படம். சிபி சத்யராஜ், தனது குழந்தைப் பருவ காதலி அபிநயாவான நடிகை நிகிலா விமலை ரகசிய திருமணம் செய்துகொள்கிறார். இந்த நிலையில் அவர்கள் இருவரும் தங்கள் தேனிலவுக்காக மணாலிக்குச் செல்கிறார்கள். அப்போது அவர்கள் தங்கியிருக்கும் ஓட்டலில் ரகசிய கேமரா வைத்து படம் எடுப்பதைக் கண்டுபிடிக்கிறார்கள். ரகசிய கேமரா மூலம் எடுக்கப்படும் படத்தை ஆன்லைனில் வெளியிட்டு அதன் மூலம் சிலர் பணம் சம்பாதிப்பதையும் அவர்கள் கண்டுபிடிக்கிறார்கள். இவர்களை எதிர்த்து அவர்கள் இருவரும் எப்படி போராடி ஜெயித்தார்கள் என்பதே படத்தின் கதை. இந்த படம் நாளை (25ம் தேதி) மதியம் 2 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.