அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, என்ஜிகே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது கமல்ஹாசனின் இந்தியன்-2 படத்திலும், சிவகார்த்திகேயனின் அயலான் படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், ‛திரைப்படங்கள் தியேட்டர்களில் வெளிவருவதைத்தான் விரும்புகிறேன். திகில் படங்கள் என்றால் விருப்பம். நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தியேட்டரில்தான் பார்க்க வேண்டும். லைட்மேன், கேமராமேன், உதவி இயக்குனர்கள் உள்ளிட்ட திரைத்துறையினர் ஒரு நாளைக்கு 15 மணிநேரம் வரை உழைக்கின்றனர். திரைத்துறையினரின் கஷ்டத்தை ரசிகர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்' என உருக்கமாக கூறியுள்ளார்.