அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
தற்போது கமல் நடிக்கும் இந்தியன் -2 , ராம்சரண் நடிக்கும் ஆர்சி -15 ஆகிய படங்களை இயக்கி வருகிறார் ஷங்கர். இந்த படங்களை அடுத்து 1000 கோடி பட்ஜெட்டில் அவர் ஒரு சரித்திர படத்தை இயக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. மதுரை எம்.பி சு. வெங்கடேசன் எழுதிய வேள்பாரி என்ற நாவலை மையமாக கொண்டு அந்த படம் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. சூர்யா நாயகனாக நடிக்கும் அப்படம், தமிழ் உள்பட பல மொழிகளில் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா-42 படம் 3டி தொழில்நுட்பத்தில் சரித்திர கதையில் உருவாகும் நிலையில், அடுத்து ஷங்கர் இயக்கும் பிரமாண்ட படத்திலும் சரித்திர கதையிலேயே நடிக்கப்போகிறார் சூர்யா. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.