அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள திரைப்படமான 'பொன்னியின் செல்வன்' படம் இரு பாகங்களாக வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, வந்தியத் தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யா ராய் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். லைகா நிறுவனம் இந்தப் படத்தைத் பிரமாண்டமாக தயாரித்து வருகின்றது. வருகின்ற செப்டம்பர் 30ம் தேதி இந்த படத்தின் முதல் பாகம் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தை சார்ந்த ஒரு சுவாரஸ்ய தகவலை எழுத்தாளர் ஜெயமோகன் வெளியிட்டுள்ளார். பொன்னியின் செல்வன் படத்தின் ஆரம்பகட்டத்தில் வந்தியத் தேவன் கதாபாத்திரத்தில் விஜயையும், அருண்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் மகேஷ் பாபுவையும் நடிக்க வைக்க வேண்டும் என மணிரத்னம் விரும்பினார் என கூறியுள்ளார்.