அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய்யின் தாயாரும் பிரபல சீனியர் இயக்குனரான எஸ்.ஏ.சந்திரசேகரின் மனைவியுமான ஷோபா சந்திரசேகர் தற்போது முதன்முறையாக டுவிட்டர் பக்கத்தில் தனது புதிய கணக்கை துவங்கியுள்ளார். அதில் “டுவிட்டரில் இணைந்ததில் மகிழ்ச்சி.. முதல் படமாக எனது அன்பு மகன் விஜய் உடன் இருக்கும் புகைப்படம்” என்று கூறி விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து கொண்டுள்ளார் ஷோபா சந்திரசேகர்.
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமான ஷோபா சந்திரசேகர் இயக்குனராகவும் மாறி சில படங்களை இயக்கியுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் விஜய்க்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட சமயத்தில் அதை பக்குவமாக கையாண்ட ஷோபா சந்திரசேகர், இப்போது டுவிட்டரில் நுழைந்திருப்பது விஜய் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும் ஆர்வத்தையும் எழுப்பி உள்ளது.