யாரிடமும் எளிதில் சிக்க மாட்டேன் : கயாடு லோஹர் | 'கம் பேக்' கொடுக்கப் போகும் லைகா | மலையாள பட இயக்குனருடன் கைகோர்த்த ஜீவா | பாண்டிராஜ், விஜய் சேதுபதி படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை | விஜய்க்காக பின்னணி பாடிய ராப் இசைக் கலைஞர் அனுமான் கைண்ட் | கூலி படத்தை அடுத்து கைதி 2 வை இயக்கும் லோகேஷ் கனகராஜ் | அர்ஜூன் தாஸிற்கு தாதா சாகேப் பால்கே விருது!; 'ரசவாதி' படத்திற்காக அவர் பெறும் 3வது விருது | 7 வருடங்களுக்கு பிறகு திரைக்கு வரும் ஜி.வி. பிரகாஷ் படம்! | ஜெய்யின் 'வொர்கர்' புதிய பட அறிவிப்பு! | மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் வெளியாகாத ரெட்ரோ, ஹிட் 3 ஹிந்தி பதிப்புகள் ; காரணம் என்ன ? |
தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் சென்னை தரமணியில் இயங்கும் திரைப்படப் பயிற்சி நிறுவனம் இயங்கி வருகிறது. 1945ம் ஆண்டு இந்த பயிற்சி நிறுவனம் தொடங்கப்பட்டது. எம்ஜிஆர் நினைவாக 2006ம் ஆண்டு எம்ஜிஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிறுவனத்தில் நடிப்பு, இயக்கம் ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, கிராபிக்ஸ் உள்ளிட்ட பல பிரிவுகளில் ஒரு வருடம் முதல் 3 வருடம் வரை பயிற்சி அளிக்கப்படுகிறது. நடிகர்கள் ரஜினிகாந்த், மோகன், நாசர், இயக்குனர்கள் ஆர்.கே.செல்வமணி, ஆபாவாணன், ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் இங்கு பயின்ற மாணவர்கள்.
இந்த கல்லூரிக்கு முதல்வர், பேராசிரியர்கள், பயிற்சியாளர்கள் அரசு ஊழியர்களாக பணியாற்றுவார்கள். தற்போது இந்த நிறுவனத்தின் தலைவராக நடிகர் ராஜேஷை தமிழக அரசு நியமித்துள்ளது. நடிகர் ராஜேஷ் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். திரைப்படம் தொடர்பாக பல ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். இவரை திரைப்படத் துறையின் கலைக் களஞ்சியம் என்று அழைப்பார்கள். தற்போதும் சினிமா மற்றும் சின்னத்திரையில் நடித்து வருகிறார். ராஜேஷ் நடிக்க வருவதற்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிவர் என்பது குறிப்பிடத்தக்கது.