3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் | 5 மொழிகளில் வெளியாகும் நரசிம்மர் படம் | இயக்குனர் கே.பாலசந்தர் பிறந்தநாள்: நன்றி மறந்தார்களா சினிமாகாரர்கள் | விமர்சனங்களைக் கண்டு கொள்ளாத சமந்தா | முதல் படத்துக்கு செல்ல பணமில்லை: நண்பனை நினைத்து கண்கலங்கிய இயக்குனர் |
ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 169வது படமாக ஜெயிலர் தயாராகி வருகிறது. இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, விநாயகன் மற்றும் ராக்கி புகழ் வசந்த் ரவி ஆகிய நடிகர்கள் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் ரஜினிகாந்த் நடிக்கும் 170வது படத்தை டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ளார் என்றும் ஒரு தகவல் கடந்த சில நாட்களாக சோசியல் மீடியாவில் பரவிவருகிறது.
இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்ல இந்த படத்தில் வில்லனாக நடிகர் அரவிந்த்சாமி நடிக்க உள்ளார் என்கிற ஒரு புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 1991ல் மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த தளபதி படத்தில் தான் அரவிந்த்சாமி அறிமுகமானார். அந்த வகையில் 31 வருடங்கள் கழித்து இவர்கள் இணைந்து நடித்தால் நிச்சயமாக அது ஆச்சரியமான விஷயம் தான். இன்று நடைபெற உள்ள பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் கூட, இந்த தகவலை தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்சன்ஸ் அறிவித்தாலும் அறிவிக்கலாம் என்கிற பேச்சும் சோசியல் மீடியாவில் எழுந்துள்ளது.