அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் சென்ற நயன்தாராவும் விக்னேஷ்சிவனும் தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக ஹனிமூனுக்காக ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளார்கள். இந்த நிலையில் நேற்று நம் நாட்டின் சுதந்திர தினத்தை ஒட்டி அவர்கள் இருவரும் ஸ்பெயின் நாட்டிலேயே இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி 75வது சுதந்திர தினத்தை கொண்டாடி உள்ளார்கள்.
தனது சமூக வலைதளத்தில் தாங்கள் தேசிய கொடியை ஏந்தி நிற்கும் ஒரு வீடியோவை வெளியிட்டு அதன் பின்னணியில் ஏ.ஆர்.ரகுமானின் வந்தே மாதரம் ஆடியோவையும் ஒலிக்க வைத்திருக்கிறார் விக்னேஷ் சிவன். மேலும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் 75வது சுதந்திர தின வாழ்த்துகள். இந்த நாளை மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் கொண்டாடுவோம். ஒரு இந்திய குடிமகனாக நாம் அனைவரும் ஆசிர்வதிக்கப்பட வேண்டும். உலகிலேயே மிகவும் பாதுகாப்பான சுதந்திரமான ஜனநாயக மற்றும் மகிழ்ச்சியான வீடு என்றால் நம்முடைய இந்திய நாடு தான் என்று அவர் ஒரு பதிவும் போட்டு உள்ளார்.