அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
ஹிந்தித் திரையுலகத்தின் முக்கியமான ஹீரோக்களில் முதன்மையானவர் ஆமீர்கான். அவர் நடித்து வெளிவரும் படங்கள் எப்போதுமே வித்தியாசமான படங்களாக இருக்கும் என்ற ஒரு நம்பிக்கை பாலிவுட் ரசிகர்களுக்கு இருந்தது. ஆனால், அவருடைய கடைசி இரண்டு படங்கள் பெரும் தோல்வியைச் சந்தித்து அந்த நம்பிக்கையை குலைத்துவிட்டது.
ஆமீர்கான் நடித்து கடந்த வாரம் வெளிவந்த 'லால் சிங் சத்தா' படம் பாக்ஸ் ஆபீசில் தோல்வியைத் தழுவியுள்ளது. படத்திற்கு எதிர்பார்த்த வசூல் இல்லை என்பது உண்மை. படம் வெளியாகி ஐந்து நாட்கள் ஆன பின்னும் வசூலில் 50 கோடியைத் தாண்டவில்லை. ஆமீர்கான் நடித்து நான்கு வருடங்களுக்கு முன்பு வெளிவந்த 'தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்' படமும் தோல்வியைத் தழுவியது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
பட வெளியீட்டிற்கு முன்பாக முக்கிய ஊர்களுக்குச் சென்று படத்திற்கு புரமோஷன் செய்தார் ஆமீர்கான். ஆனால், பட வெளியீட்டிற்குப் பின் கிடைத்த மோசமான வரவேற்பால் அவர் தற்போது தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றுவிட்டாராம். மும்பை மீடியாவைச் சேர்ந்தவர்கள் அவரைத் தொடர்பு கொண்டால் தொலைபேசியை எடுப்பதில்லையாம்.
அதே சமயம் படத்தின் மூலம் எந்த நஷ்டமும் இல்லை என படத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்படத்திற்காக ஆமீர்கான் எந்த சம்பளமும் வாங்கவில்லை என்கிறார்கள். எந்த நஷ்டம் வந்தாலும் அதில் பங்கெடுப்பேன் என அவர் ஏற்கெனவே சொல்லியிருக்கிறார் என்றும் தகவல்.