அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
மிருணாள் தாகூர் யார் என்பது தமிழ் சினிமா ரசிகர்களுக்குத் தெரிந்திருக்கும். தெலுங்கிலிருந்து தமிழுக்கு டப்பிங் ஆகி வரவேற்பைப் பெற்ற 'சீதா ராமம்' படத்தின் கதாநாயகி.
கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே டிவி தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன்பின் சில மராத்திப் படங்களிலும் நடித்துள்ளார். ஹிந்தியில் வெளிவந்த ஷாகித் கபூர் நடித்த 'ஜெர்ஸி' படத்தின் கதாநாயகியும் இவர்தான். 'சீதா ராமம்' படம் மூலம் தென்னிந்திய ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார் மிருணாள்.
சமூக வலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் மிருணாளின் பழைய புகைப்படங்களை ரசிகர்கள் தேடி எடுத்து வைரலாக்கி வருகின்றனர். அந்த விதத்தில் அவருடைய சில கிளாமர் புகைப்படங்களை இப்போது சமூக வலைத்தளங்களில் பரவிவிட்டுள்ளனர். இரண்டு வருடங்களுக்கு முன்பாக மிருணாள் எடுத்த கிளாமர் படங்களும் தப்பவில்லை. 'சீதா ராமம்' படத்தில் சிறிதும் கவர்ச்சி காட்டாமல் குடும்பப் பாங்காக நடித்த மிருணாளுக்கு இந்த கிளாமர் புகைப்படங்கள் அவரது இமேஜுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.