ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

சினிமாவில் அறிமுகமான சில வருடங்களிலேயே நான்கு படங்களின் மூலம் முன்னணி இயக்குனராக உயரம் தொட்டுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். குறிப்பாக சமீபத்தில் கமல், விஜய்சேதுபதி, பஹத் பாசில் என மல்டி ஸ்டார் கூட்டணியில் வெளியான விக்ரம் திரைப்படம் 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்து தென்னிந்திய சினிமாவையே ஆச்சரியமாக பார்க்க வைத்துள்ளது. கார்த்தி, விஜய், சமீபத்தில் கமல் ஆகியோரின் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக மீண்டும் விஜய் நடிக்கும் படத்தையே இயக்க இருக்கிறார் என்பது ஏற்கனவே உறுதியாகிவிட்டது.
இந்த படத்தின் வேலைகளில் ஈடுபடுவதற்காக சோசியல் மீடியா பக்கத்திலிருந்து தற்காலிகமாக விடை பெறுவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார் லோகேஷ் கனகராஜ். இந்த நிலையில் அவரது நண்பரும் கதாசிரியரும் மேயாத மான், குலுகுலு படங்களின் இயக்குனருமான ரத்னகுமார், லோகேஷ் கனகராஜூடன் மலைப்பாங்கான பகுதி ஒன்றில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் ஒன்று, இரண்டு என ஒன்பது வரை வரிசையாக உள்ள எண்களில் ஆறு, ஏழு என்கிற எண்களை மட்டும் மறைத்து விட்டு வாட்ஸ் குக்கிங்? என்று பதிவிட்டுள்ளார் ரத்னகுமார்.. ஆறு ஏழு என்பது விஜய் 67 படத்தை தான் குறிக்கிறது என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை. மாஸ்டர் படத்திலும் லோகேஷ் கனகராஜூடன் இணைந்து பணியாற்றியதற்காக அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரத்னகுமாரை விஜய் தனியாக குறிப்பிட்டு பாராட்டியது இங்கே நினைவு கூறத்தக்கது.