அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
எஸ்.பி.ஆர் ஸ்டூடியோஸ் சார்பில் எஸ்.பி.ராஜா சேதுபதி தயாரித்துள்ள படம் ‛ஜோதி'. ஏ.வி.கிருஷ்ண பரமாத்மா இயக்கி உள்ளார். இதில் வெற்றி, ஷீலா ராஜ்குமார், கிரிஷா க்ரூப், குமரவேல், சாய்பிரியங்கா உள்பட பலர் நடித்துள்ளனர்.
படம் பற்றி இயக்குனர் கூறியதாவது : இது உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி உள்ள படம். கடலூர் அரசு மருத்துவமனையில் ஒரு பெண்ணின் பிறந்த குழந்தையை இன்னொரு பெண் திருடிச் சென்றார். டி.எஸ்.பி சாந்தி என்ற போலீஸ் அதிகாரி 2 மணிநேரத்தில் குழந்தையை மீட்டார். இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளது. குழந்தை கடத்தலின் பின்னணியில் இருப்பது யார். எதற்காக கடத்துகிறார்கள் என்கிற உண்மைகளை படம் பேசப்போகிறது. இவ்வாறு அவர் கூறினார்.