3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் | 5 மொழிகளில் வெளியாகும் நரசிம்மர் படம் | இயக்குனர் கே.பாலசந்தர் பிறந்தநாள்: நன்றி மறந்தார்களா சினிமாகாரர்கள் | விமர்சனங்களைக் கண்டு கொள்ளாத சமந்தா | முதல் படத்துக்கு செல்ல பணமில்லை: நண்பனை நினைத்து கண்கலங்கிய இயக்குனர் |
'கேப்டன் அமெரிக்கா, அவஞ்சர்ஸ் - இன்பினிட்டி வார், எண்ட் கேம்' ஆகிய படங்களை இயக்கி ரூசோ பிரதர்ஸ் இயக்கியுள்ள ‛தி கிரே மேன்' படம் உலகம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த 22ம் தேதி வெளியானது. இதில் தமிழ் நடிகர் தனுஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஒரு தமிழ் நடிகர் ஹாலிவுட்டின் முக்கியமான படத்தில் நடிக்கிறார் என்ற செய்தியால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.
படத்தில் வில்லனாக அறிமுகமாகும் தனுஷ் சண்டை காட்சிகளில் மிரட்டுகிறார். ஹாலிவுட் நடிகர்களுக்கு இணையாக இவரது சண்டை காட்சிகளும் மாஸாக இருந்தாலும், தனுஷ் ரசிகர்களுக்கு இப்படம் ஏமாற்றத்தையே அளித்துள்ளது. ஹீரோ - ஹீரோயினோடு சண்டை போட்டு சில முக்கிய ஆதாரங்கள் அடங்கிய பென்டிரைவை வில்லனிடம் கொடுப்பது, அவர்கள் கெட்டவர்கள் என்பது தெரிந்த உடன், தனக்கு பணம் முக்கியம் இல்லை என, ஹீரோயினிடம் அந்த பென்டிரைவை ஒப்படைப்பது என இரண்டு காட்சிகளில் மட்டுமே தலை காட்டுகிறார்.
இந்த படத்தில் தமிழராகவே நடித்திருக்கும் தனுஷ் எதற்கு என்ற கேள்வியே படம் பார்த்து முடித்தவுடன் எழுகிறது. மாஸாக அறிமுகமானாலும் இறுதியில் அவர் என்ன ஆனார் என்பதை படத்தில் காட்டவில்லை. தனுஷ் இப்படத்தில் மொத்தம் 10 நிமிடம் கூட இல்லாதது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை மட்டுமே கொடுத்துள்ளது.