Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நானி படத்தில் வில்லியாக நடிக்கும் பூர்ணா

24 ஜூலை, 2022 - 11:09 IST
எழுத்தின் அளவு:
Poorna-plays-negative-role-in-Nani-movie

தமிழில் மிஷ்கின் இயக்கியுள்ள பிசாசு- 2 படத்தில் நடித்திருக்கும் பூர்ணா, தெலுங்கில் பேக் டோர் படத்திலும், மலையாளத்தில் விரித்தம் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது தெலுங்கில் நானி, கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்து வரும் தசரா என்ற படத்தில் வில்லி வேடத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கிறார் பூர்ணா. இதற்கு முன்பு தெலுங்கில் அகண்டா என்ற படத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக நடித்த பூர்ணா, தமிழில் தலைவி படத்தில் சசிகலா வேடத்தில் நடித்திருந்தார். அதையடுத்து தெலுங்கில் பவர் பிளே என்ற படத்தில் நெகட்டிவ் கலந்த ரோலில் நடித்தவர், தற்போது நானியின் தசரா படத்தில் வில்லியாக நடிக்கிறார். புதுமுக இயக்குனர் ஸ்ரீகாந்த் ஓட்டேலா இயக்கும் இந்த படம் நிலக்கரி சுரங்க பின்னணியை மையமாகக் கொண்ட கதையில் உருவாகி வருகிறது. மேலும், கூடிய சீக்கிரமே பூர்ணா துபாயை சேர்ந்த தொழிலதிபர் சானித் ஆசிப் அலி என்பவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ராஷ்மிகா மந்தனாவின் முதல் ஹிந்தி படம் அக்டோபர் 7ல் ரிலீஸ்!ராஷ்மிகா மந்தனாவின் முதல் ஹிந்தி ... நடிகர், நடிகையர் நிர்வாண 'போஸ்' : தமிழ் சினிமாவில் புதிய கலாச்சாரம் நடிகர், நடிகையர் நிர்வாண 'போஸ்' : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)