போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் | 'அமரன்' வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வாரா 'மதராஸி' ? | ரிலீஸ் தேதி குழப்பத்தில் 'கருப்பு' : காத்திருக்கும் ரசிகர்கள் | பிளாஷ்பேக் : சூப்பர் ஸ்டாருக்கு பெயர் சூட்டிய சூப்பர் ஸ்டார் | பிளாஷ்பேக் : பாரதிராஜா இயக்கதில் நடிக்க மறுத்த சன்னி தியோல் | பாரிஜாதம் : புதிய தொடரில் ஆலியா மானசா |
சர்ச்சையான விஷயங்களில் மட்டுமே சிக்கி அதன்மூலம் பிரபலமானவர் இயக்குனர் லீனா மணிமேகலை. இவர் தற்போது காளி என்கிற பெயரில் இயக்கியுள்ள டாக்குமென்டரி படம் மூலம் கடந்த சில நாட்களாக மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். தனது படத்தின் போஸ்டரில் காளி புகை பிடிப்பது போன்றும், இதை நியாயப்படுத்துவது போன்று சிவன்-பார்வதி வேடமிட்ட நபர்கள் புகை பிடிப்பது போன்றும் போட்டோக்களை வெளியிட்டு இந்துமத உணர்வாளர்களின் உணர்வுகளுடன் விளையாடி, கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார்.
அதுமட்டுமல்ல தான் உருவாக்கியுள்ள டாக்குமென்டரி படத்தில், “என்னுடைய காளி விசித்திரமானவள்.. அவள் இந்துத்துவாவை அகற்றுவாள்.. முதலாளித்துவத்தை அழிப்பாள்.. அவள் தன் ஆயிரம் கைகொண்டு அனைவரையும் சித்திரவதை செய்வாள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இவரது செயலுக்கு பிரபலங்கள் பலர் கண்டனம் தெரிவித்து இருந்தாலும், சமீபத்தில் தி காஷ்மீர் பைல்ஸ் படம் மூலம் மிகப்பெரிய அளவில் புகழ்பெற்ற இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி, லீனா மணிமேகலையின் இந்த கருத்துக்களால், அவரது செயல்பாடுகளால் எரிச்சலாகி, “யாராவது இதுபோன்ற பைத்தியங்களை அகற்ற முடியாதா?” என கேள்வி எழுப்பி உள்ளார்.