போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் | 'அமரன்' வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வாரா 'மதராஸி' ? | ரிலீஸ் தேதி குழப்பத்தில் 'கருப்பு' : காத்திருக்கும் ரசிகர்கள் | பிளாஷ்பேக் : சூப்பர் ஸ்டாருக்கு பெயர் சூட்டிய சூப்பர் ஸ்டார் | பிளாஷ்பேக் : பாரதிராஜா இயக்கதில் நடிக்க மறுத்த சன்னி தியோல் | பாரிஜாதம் : புதிய தொடரில் ஆலியா மானசா |
நடிகர் விஜய் தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் அவரின் 66வது திரைப்படமாக உருவாகி வரும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டர்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனிடையே விஜய்யின் 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.
ஆனால் அப்படம் குறித்த அதிகாரபூர்வமான இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் இவர்கள் இணைவது உறுதியாகி உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் படத்தொகுப்பாளராக பிலோமின் ராஜ் பணியாற்ற இருப்பதாகவும், படத்திற்கு 'நான் வாழும் உலகம்' என்று பெயரிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தலைப்பு தற்போது தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.