அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
கலர்ஸ் தமிழ் சேனல் சீரியல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இதற்காகவே சீரியல்களுக்கு மற்ற சேனல்களை விட அதிக பட்ஜெட் ஒதுக்கி வருவதாகவும் சின்னத்திரை வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் கலர்ஸ் தமிழ் சேனலின் பெரிய பட்ஜெட் சீரியல்களில் ஹிட் அடித்த தொடர்களில் ஒன்று அம்மன். மூன்று சீசன்களாக ஒளிபரப்பாகிய அம்மன் தொடர் 1140 எபிசோடுகளை கடந்துள்ள நிலையில் இப்போது முடிவுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கேற்றார் போல் சமீபத்தில் வெளியான ப்ரோமோவிலும் ஹீரோயின் சக்தி இறந்துவிட்டது போல் காட்சிப்படுத்திப்பட்டுள்ளது. எனினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.