ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

டாக்டர் ராஜசேகர், ஜீவிதா தம்பதியரின் மகள் ஷிவானி ராஜசேகர். இந்த ஆண்டுக்கான மிஸ் இந்தியா 2022 போட்டியில் தமிழ்நாடு சார்பில் கலந்து கொள்ள இருந்தார். ஆனால், தற்போது அதிலிருந்து விலகியுள்ளார்.
தமிழில் 'அன்பறிவு' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். சமீபத்தில் வெளிவந்த 'நெஞ்சுக்கு நீதி' படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார். மூன்றாமாண்டு எம்பிபிஎஸ் படிக்கும் ஷிவானி, மலேரியாவால் பாதிக்கப்பட்டதால் அழகுப் போட்டிக்கான பயிற்சிகளை சரிவர மேற்கொள்ள முடியவில்லை எனத் தெரிகிறது.
விலகலுக்கான காரணம் குறித்து ஷிவானி, “எனது மருத்துவப் படிப்பின் எழுத்துத் தேர்வுகள் மற்றும் மலேரியாவால் நான் பாதிக்கப்பட்ட காரணத்தால் பெரும்பாலான அழகுப் போட்டிக்கான பயிற்சிகளை என்னால் சரிவர செய்ய முடியவில்லை. மீண்டும் நலம் பெற்றுத் திரும்பி வருவேன். எனக்கேற்றபடி எதுவும் நடக்கவில்லை. எனது பிராக்டிக்கல் தேர்வுகள் திடீரென ஜுலை 3ம் தேதிக்கு மாற்றப்பட்டுவிட்டது,” என்றும் தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடத்திற்கான அழகுப் போட்டியில் கலந்து கொள்வேன் என்றும் ஷிவானி மேலும் தெரிவித்துள்ளார். தற்போது ஐதராபாத்தில் வசித்து வரும் ஷிவானி தமிழ்நாடு சார்பாகத்தான் இந்த அழகுப் போட்டியில் கலந்து கொள்ள இருந்தார். தற்போது அவர் போகாத காரணத்தால் இந்த வருடம் தமிழ்நாடு சார்பில் யாரும் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.