மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது; மத்திய அரசு அறிவிப்பு | மலையாள சினிமாவில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'லோகா' | சைஸ் ஜீரோ தோற்றத்துக்கு மாறும் தமன்னா | ஜனநாயகன் படத்தில் மூன்று விஷயங்களை எதிர்பார்க்கலாம் : சொல்கிறார் வினோத் | ‛வீரம்' குழந்தை நட்சத்திரம் யுவினா நடிக்கும் ரைட் | 40 வருட இடைவெளி : அன்று நாயகன், இன்று வில்லன் | புதிய படங்களில் தொடரும் இளையராஜா பாடல்கள் | நாளை நடிகர் சங்க பொதுக்குழு : எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, ஜி.வி.பிரகாஷ் கவுரவிப்பு | அனிருத்துக்கும் எனக்கும் போட்டியா : சாய் அபயங்கர் சொன்ன நச் பதில் | 5 படங்கள் ரிலீஸ் ஆகியும் ஓபனிங் இல்லாத முதல்நாள் வசூல் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்த ‛விக்ரம்' படம் கடந்த ஜூன் 3ல் திரைக்கு வந்தது. நான்கு ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த கமல் படம் இது என்பதால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக படமும் சிறப்பாக இருக்க வசூலும் பட்டையை கிளப்பியது. ரூ.300 கோடிக்கும் அதிகமான வசூலை செய்து சாதனை படைத்துள்ளது இந்த படம்.
இந்நிலையில் இந்த படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சியில் நடந்தது. இதில் கமல், லோகேஷ், அனிருத், உதயநிதி உள்ளிட்ட விக்ரம் படக்குழுவினர் பங்கேற்றனர். அப்போது நிகழ்வில் கலந்து கொண்டு அனைவருக்கும் 40 வகையான சைவ, அசைவ உணவு வகைகளை கொடுத்து அசத்தி உள்ளனர். நாட்டுக்கோழி சூப், முருங்கைக் கீரை சூப், மட்டன் கீமா, சிக்கன் வறுவல், வஞ்சரம் மீன், இறால், மட்டன் சுக்கா, மட்டன், சிக்கன் பிரியானி, கொங்கு ஸ்பெஷல் சைவ பிரியாணி, தால்சா, சைவ பள்ளிபாளையம் கிரேவி, இடியாப்பம், ஆட்டுக்கால் பாயா, சைவ குருமா, மதுரை மட்டன் கறி தோசை, ஐஸ்கிரீம், ஜூஸ் வகைகள் என தடபுடலாக இந்த விருந்து நடந்தது.
இந்த விருந்தில் கமல்ஹாசன், லோகஷ் கனகராஜ், அனிருத், உதயநிதி உள்ளிட்ட அனைவரும் பங்கேற்று சாப்பிட்டனர்.