மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
மணிரத்னம் இயக்கி வரும் படம் கடல். இதில் கார்திக் மகன் கவுதம், ராதா மகள் துளசி நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் ஒரு அதிரடியான முத்தக்காட்சி இடம் பெற்றுள்ளது. லிப் லாக் எனப்படும் ஆங்கில முத்தக் காட்சி இது. படத்திற்கு தெலுங்கு, மற்றும் தமிழில் டிரைய்லர் வெளியிடுள்ளார் மணிரத்னம். இதில் தெலுங்கு டிரைய்லரில் இந்த முத்தக் காட்சி இடம் பெற்றுள்ளது. ஆனால் படம் தொடர்பாக வெளியிட்டுள்ள போட்டோக்களில் இந்த முத்தக் காட்சியை வெளியிடவில்லை. "பத்து விநாடிகள் இடம்பெறும் இந்த முத்தக்காட்சி படத்தின் முக்கிய பகுதியாகும். இதற்கு ராதா முதலில் தயங்கினார் ஆனால் துளசி தைரியமாக நடித்ததார். ஹீரோ கவுதம் பல டேக்குகள் வாங்கி நடித்தார். 10 விநாடி முத்தக் காட்சி எடுக்க நான்கு மணி நேரம் ஆனது. துளசி ரொம்ப தயங்கியதால் முக்கியமான டெக்னீஷியன்கள் தவிர மற்றவர்கள் வெளியே அனுப்பப்பட்டு படம் பிடிக்கப்பட்டது" என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அலைகள் ஓய்வதில்லை படத்தில் கார்த்திக்-கும், ராதாவும் பூக்களுக்குள் ஆடையின்றி படுத்திருப்பது போன்ற ஒரு காட்சி படத்தில் வேண்டுமென்று கருதிய மணிரத்னம் இந்த முத்தக் காட்சியை வைத்ததாகவும் கூறுகிறார்கள். அந்தக் காட்சி போன்று இதுவும் பரபரப்பாக பேசப்படுமாம்.