Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

புஷ்பா - ஆபாச வசனக் காட்சி நீக்கம்?

19 டிச, 2021 - 12:51 IST
எழுத்தின் அளவு:
Pushpa-controversial-dialogue-will-delete

சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்து இரு தினங்களுக்கு முன்பு வெளியான படம் 'புஷ்பா'.

இப்படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா இடையிலான காதல் காட்சி ஒன்றில் ஆபாசமான வசனங்களும், சில செய்கையும் இடம் பெற்றுள்ளது. படத்தில் ஒரு காட்சியில் ராஷ்மிகா வீட்டிற்கருகில் ஒரு வேனில் இருவரும் அமர்ந்து காதல் செய்யும் காட்சி மிகவும் ஆபாசமாக உள்ளதாக ரசிகர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.

'புஷ்பா' படத்தை குடும்பத்துடன் பார்க்க வரும் ரசிகர்களுக்கு அது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக தியேட்டர்காரர்களும் படக்குழுவினருக்கு தெரிவித்துள்ளார்களாம். அதனால், அந்த குறிப்பிட்ட காட்சியை நீக்கிவிட படக்குழு முடிவு செய்துள்ளதாக டோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே படத்தில் சமந்தா இடம் பெறும் பாடல் ஒன்றும், ராஷ்மிகாவின் பாடல் ஒன்றும் ஆபாசமான ஆடையுடன் படமாக்கப்பட்டுள்ளது. அதில் சமந்தா பாடல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் இவற்றையெல்லாம் தவிர்த்திருக்கலாம் என விமர்சகர்களும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் பிகினியில் அசத்திய பூஜா ஹெக்டேமீண்டும் பிகினியில் அசத்திய பூஜா ... கடவுள் கொடுத்த வரம் - மேடையில் அழுத சாய் பல்லவி கடவுள் கொடுத்த வரம் - மேடையில் அழுத ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)