தோட்டா தரணிக்கு செவாலியே விருது | மீண்டும் ரஜினியை இயக்குவது போன்று கமலையும் இயக்குவீர்களா? சுந்தர்.சி கொடுத்த பதில் | நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | ‛இன்று போய் நாளை வா' : கே.பாக்யராஜ் சொன்ன பிளாஷ்பேக் | ராஜமவுலி படத்தில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியீடு | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ராதிகா ஆப்தே படம் | அனந்தா படத்தில் நடந்த அதிசயங்கள் : சத்யசாய்பாபா மகிமை சொன்ன சுரேஷ் கிருஷ்ணா | டப்பிங் பணிகளை துவங்கிய அபிஷன், அனஸ்வரா | தமிழகத்தில் வெளியாகும் ஆஸ்கர் பரிந்துரை படம் | அன்னை இல்லத்தில் இருந்து அடுத்து வாரிசு: ரஜினி ஆசி |

மலையாள சினிமாவில் ஒரு புது முயற்சி என்பதை விட, ஒரு சாதனை முயற்சியாகத்தான் மோகன்லால் நடிக்கும் 'புலி முருகன்' படம் உருவாகியுள்ளது. இதுநாள் வரை தயாரான மலையாள படங்களில் இதுதான் அதிகமான பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம். அதனால் படத்தின் வியாபார எல்லையையும் அதற்கேற்ப விரிவுபடுத்தினால் தான் போட்ட அசலையும் நியாயமான லாபத்தையும் சிந்தாமல் சிதறாமல் அள்ளலாம் என படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த முயற்சியின் பின்னால் மோகன்லாலின் உழைப்பும் பங்கும் அதிகமாக இருக்கிறதாம்.
பொதுவாக மோகன்லாலின் படங்கள் கேரளாவை தாண்டி, தமிழ்நாட்டில் சில நகரங்களில் உள்ள குறிப்பிட்ட தியேட்டர்களில் வெளியாவது வழக்கம். மற்ற மாநிலங்களில் அவ்வளவாக ரிலீஸாவது இல்லை. ஆனால் இந்தமுறை 'புலி முருகன்' படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட இருக்கிறார்கள் என்பதை மோகன்லாலே தெரியப்படுத்தியுள்ளார். அதுமட்டுமல்ல, படத்தின் முக்கிய காட்சிகள் வியட்நாமில் படமாக்கப்பட்டுள்ளதால், வியட்நாம், சீன மற்றும் ஸ்பானிஷ் மொழிகளுடன் சேர்த்து மொத்தம் ஏழு மொழிகளில் டப்பிங் செய்யப்பட இருக்கின்றதாம்.




