Advertisement

சிறப்புச்செய்திகள்

தாய்க்குத் தலைமகன், வசீகரா, ஜெயிலர் : ஞாயிறு திரைப்படங்கள் | அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் சோஷியல் மீடியா பிரபலம் | ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? | நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மஞ்சு வாரியர் ஓட்டுநர் உரிமம் பெற்றதை புரமோசனுக்கு பயன்படுத்திய படக்குழு

19 ஜன, 2023 - 06:07 IST
எழுத்தின் அளவு:
The-film-crew-used-Manju-Warrier's-driving-license-for-the-promotion

சமீபத்தில் வெளியான துணிவு படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்திருந்தார் மஞ்சு வாரியர். இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் பகுதியில் நடைபெற்ற போது அஜித் உள்ளிட்ட குழுவினருடன் இணைந்து கிட்டத்தட்ட 1000 கிலோ மீட்டருக்கு மேல் சுற்றுப்பயணம் செய்தார் மஞ்சு வாரியர். இந்த பயண அனுபவம் குறித்து அவர் கூறும்போது விரைவில் தான் ஓட்டுனர் உரிமம் பெற்று விடுவேன் என்றும், அடுத்த முறை தானே பைக் ஓட்டி செல்வேன் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது அவருக்கு இரு சக்கர வாகன ஓட்டுனர் உரிமம் கிடைத்துள்ளது. இந்த விஷயத்தை அப்படியே மஞ்சு வாரியர் நடித்துவரும் படம் ஒன்றிற்கு புரமோஷனாக பயன்படுத்தியுள்ளனர் படக்குழுவினர்.

மலையாளத்தில் தற்போது வெள்ளரிப்பட்டணம் என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஒரு கிராம பஞ்சாயத்தின் வார்டு மெம்பராக கே.பி.சுனந்தா என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மஞ்சு. படத்தில் அவர் இருசக்கர வாகன ஓட்டுனர் உரிமம் பெற ரொம்பவே போராடுவதாகவும் அதைப்பெற்று தருவதற்காக அவர் தனது குருவுக்கு அவ்வப்போது 500 ரூபாய் தண்டம் அழுவதாகவும் காமெடியாக காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன.

இதனை குறிப்பிட்டு கே.பி சுனந்தா கதாபாத்திரம் மஞ்சுவாரியருக்கு, “நீங்கள் இரு சக்கர வாகனம் ஓட்டுநர் உரிமம் பெற்றதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.. நான்தான் இங்கே ஓட்டுனர் உரிமம் பெற போராடிக்கொண்டு இருக்கிறேன். விரைவில் நானும் ஓட்டுனர் உரிமம் பெற்று விடுவேன். முடிந்தால் ஒரு முறை எங்களது கிராமத்து பக்கம் வந்து செல்லவும். உங்களை பார்க்க அனைவரும் ஆவலாக இருக்கிறார்கள். தற்போது நான் ஒரு வேலையாக இருப்பதால் உங்களுடன் பிறகு பேசுகிறேன்” என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

நிஜத்தில் மஞ்சுவாரியருக்கு இரு சக்கர வாகனம் ஓட்டுநர் உரிமம் எடுக்க வேண்டிய தேவை, அவர் நடித்து வரும் படத்திலும் இருப்பதால் இதை அழகாக படத்தின் பிரமோஷனுக்கு பயன்படுத்தி கொண்டுள்ளார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஜெய்சல்மரில் துவங்கிய மலைக்கோட்டை வாலிபன் படப்பிடிப்புஜெய்சல்மரில் துவங்கிய மலைக்கோட்டை ... ஒரு வழியாக 73 வயதில் பத்தாம் வகுப்பு பாஸான லீனா ஆண்டனி ஒரு வழியாக 73 வயதில் பத்தாம் வகுப்பு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)