Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப்குமார் காலமானார்

07 ஜூலை, 2021 - 08:34 IST
எழுத்தின் அளவு:
Legendary-Actor-Dilip-Kumar-No-More

பிரபல பாலிவுட் நடிகர் திலீப் குமார், உடல்நலக் குறைவு காரணமாக இன்று (ஜூலை 07) காலமானார். அவருக்கு வயது 98.


பிரபல பாலிவுட் நடிகர் திலீப் குமாருக்கு வயது முதிர்வு காரணமாக அவ்வப்போது உடல்நலக் குறைவு ஏற்பட்டு வந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதும், வீடு திரும்புவதுமாக இருந்தார். இந்நிலையில் கடந்த ஜூன் 30ம் தேதி அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மும்பையில் உள்ள இந்துஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி திலீப் குமார் காலமானார். திலீப் குமாரின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். திலீப் குமார், இந்திய திரையுலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை 1994ல் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஷெர்ஷா: விஷ்ணுவர்த்தனின் ஹிந்திப் படம் ஓடிடியில் வெளியாகிறதுஷெர்ஷா: விஷ்ணுவர்த்தனின் ஹிந்திப் ... மகளாக நடித்தவரை மணக்க போகிறாரா ஆமீர்கான்? மகளாக நடித்தவரை மணக்க போகிறாரா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)