டாக்சிக் படத்தில் இணைந்த ருக்மணி வசந்த் | அர்ஜூன் தாஸிற்கு ஜோடியான ஐஸ்வர்ய லட்சுமி | வடிவேலு - பஹத்பாசிலின் ‛மாரீசன்' ஆகஸ்ட் 22ல் ஓடிடியில் வெளியாகிறது! | இது ஆரம்பம்தான்: கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட ஆர்த்தி ரவி! | எனக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது! ஓப்பனாக பேசிய சம்யுக்தா | என்னது, தீபாவளிக்கு இந்த படங்கள் மட்டுமே ரிலீஸா? | ஆக் ஷனுக்கு மாறும் ஹீரோயின்கள் | இந்த வாரம் இரண்டே படம் ரிலீஸ்… | மகா அவதார் நரசிம்மா: பட்ஜெட் 15 கோடி, வசூல் 250 கோடி | சினிமாவில் இருப்பவர்களே சினிமாவை அழிக்கின்றனர்: இயக்குனர் பேரரசு வேதனை |
பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமீர்கான், முதன்முறையாக டி.வி. நிகழ்ச்சி ஒன்றை எடுத்து, நடத்தி வருகிறார். சத்தியமேவ ஜெயதே எனும் பெயரில் ஒளிப்பரப்பாகும் இந்நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. சமுதயாத்தில் நிலவும் பிரச்னைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் நிகழ்ச்சியாக இந்நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகி வருகிறது.
சமீபத்தில் மருத்துவதுறையில் உள்ள முறைகேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார் அமீர்கான். கடந்த மே மாதம் 27ம் தேதி ஒளிப்பரப்பான நிகழ்ச்சியில் நோயாளிகளிடம் இருந்து பணம் பறிக்க மருத்துவர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று மருத்துவத் துறையில் உள்ள முறைகேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார். இந்த நிகழ்சசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இதற்கு இந்திய மருத்துவக் கழகம், ஆமீர் கான் தங்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கூறியது. ஆனால் அவர் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.
இந்நிலையில் மருத்துவதுறை முறைகேடு குறித்து ராஜ்யசபாவில் பேச, பா.ஜ.க., எம்.பி., சாந்த குமார் அமீர்கானுக்கு அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்றுக்கொண்ட அமீர்கான், வருகிற 21ம் தேதி ராஜ்சபாவில் பேச இருக்கிறார். அமீருடன் சத்தியமேவ ஜெயதே குழுவினரும் செல்ல இருக்கின்றனர்.