டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் யார் தெரியுமா? | விராட் கோலியாக எஸ்டிஆர், அனுஷ்கா சர்மாவாக திரிஷா? | மீண்டும் ரஜினி, சுந்தர்.சி கூட்டணி? | பல ஆண்டுகளுக்குபின் பேட்டி கொடுத்த விஜய், அஜித் : இந்த மாற்றம் தொடருமா? | ரூ.100 கோடியை தொடுமா ரெட்ரோ? | தொடரும் இயக்குனர் இயக்கத்தில் பஹத் பாசில் | பிளாஷ்பேக் : வில்லன் இமேஜை உடைத்து காட்டுவோம்: கார்த்திக்குடன் டீல் பேசிய ஏவிஎம் | மாலத்தீவில் பார்வதி நாயர் ஹனிமூன் கொண்டாட்டம் | 'கயல்' அமுதா தற்கொலை முயற்சி? | பிளாஷ்பேக் : கவனிக்கப்பட்டாத 'திருமழிசை ஆழ்வார்' |
கன்னட திரைப்படம் மற்றும் தொடர்களில் நடித்து புகழ்பெற்ற ரேகா குமார், மலையாள தொடருக்கும் சென்று அங்கும் வெற்றிக்கொடி நாட்டிவிட்டு தற்போது தமிழ் சீரியல்களில் வில்லியாக முகாமிட்டிருக்கிறார். நடிப்புத் துறையில் 20 வருட அனுபவமிக்க சீனியர். பாரிஜாதம் தொடரில் வில்லியாக நடித்தவர் தற்போது தெய்வமகளில் வில்லியாக நடித்து வருகிறார்.
கன்னடத்தில் 40 தொடர்களிலும், மலையாளத்தில் 10 தொடர்களிலும் வில்லியாக நடித்த ரேகா குமார், சின்னத்திரையின் நிரந்தர வில்லி. தொடர்ந்து வில்லி வேடங்களில் தினமும் நடிப்பதால் வீட்டிற்கு சென்றாலும் வில்லி மூடுதான் இருக்கிறதாம். இதனால் வில்லி கேரக்டர்களின் எபெக்ட் வீட்டுக்குள் வராமல் இருக்க தினமும் காலை மலையில் தியானம் செய்கிறார். தற்போது அது நல்ல பலன் கொடுப்பதாக தெரிவித்திருக்கிறார் ரேகா குமார்.