ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை | 28 ஆண்டுகளுக்குபின் நடிக்கும் டிஸ்கோ சாந்தி | ரம்யா கிருஷ்ணன், மன்சூர் அலிகான் கேரக்டரில் முதலில் நடித்தவர்கள் : கேப்டன் பிரபாகரன் குறித்து ஆர்.கே.செல்வமணி | கூலி : பெங்களூருவில் அதிகபட்ச கட்டணம் ரூ.2000 | 5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு வரும் மெஹ்ரின் பிரதிஸ்டா | பிளாஷ்பேக்: மங்கம்மாவின் வெற்றியும், தோல்வியும் |
விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் சீரியலில் வில்லனாக நடித்து பிரபலமானவர் ஈஸ்வர். தொடர்ந்து அதேகண்கள், சிவரகசியம், நெஞ்சத்தை கிள்ளாதே, பாவமன்னிப்பு, சித்திரம் பேசுதடி என சுமார் 12 தொடர்களில் நடித்துள்ள அவர், தற்போது கல்யாண பரிசு சீரியலில் ஹீரோவாகவும், கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் பயங்கரமான வில்லனாகவும் நடித்து வருகிறார். அதேபோல் பாவமன்னிப்பு, உணர்வுகள் தொடர்களில் நடித்து விட்டு தற்போது ரம்யா கிருஷ்ணனின் வம்சம் சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் ஜெயஸ்ரீ.
இவர்கள் இருவருக்கும் இன்று புதன்கிழமை (20-1-2016) காலை 6 மணி முதல் 7.15-க்குள் சென்னை திருவான்மியூரில் உள்ள கிருஷ்ண மந்திரம் கோயிலில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் இருவரது மிக நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இது ஒரு காதல் மற்றும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் ஆகும்.
இதையடுத்து, ஜனவரி 30-ந்தேதி ஈஸ்வர்- ஜெயஸ்ரீயின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடைபெறுகிறது. இதில் சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர், நடிகைகள், இயக்கு னர்கள், தயாரிப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்கள்.