பிளாஷ்பேக்: மகனுக்காக இயக்குனராக மாறிய நாகேஷ் | பிளாஷ்பேக்: தமிழ் திரைப்படமான ஆங்கில நாடகம் | இந்த உலகில் யாரும் சுயமாக உருவாக்கப்படுவது இல்லை : சல்மான் கான் பேட்டி | அழகின் ரகசியம் சொன்ன ராஷ்மிகா | மார்ச் 27, 28ல் வெளியான படங்களின் நிலைமை என்ன | மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் |
ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் வெளியான, 'பாகுபலி' படத்தின் பிரம்மாண்டத்திற்கு முக்கிய காரணம், அதன் கலைப்பணி. பொங்கி வழியும் நீர்வீழ்ச்சி, போர்க்கள காட்சிகள், 'மகிழ்மதி' கோட்டை என, ஒவ்வொரு காட்சியிலும் மிரள வைத்தது, சாபு சிரில் மற்றும் அவரது குழுவினரின் படைப்பு. மலையாள சினிமாவில்
துவங்கிய இவரின் பிரம்மாண்டம், தமிழ், தெலுங்கு, இந்தி என பயணித்து, நான்கு தேசிய விருதுகளுடன் பல படங்களைத் தாண்டி சாதனை படைத்து வருகிறது. அவரின் கலைப்பயண அனுபவத்தை, மலையாளம் கலந்த தமிழில், அவர் நம்மிடம் பகிர்ந்துக் கொண்டபோது...
'பாகுபலி'யின் அனுபவம்?
இதுவரைக்கும், நான் வேலை பார்த்த படங்கள்ல, ரொம்ப சவாலான படம்! பெரிய 'பட்ஜெட்,' நிறைய பேர் கொண்ட குழு! சாதாரண கண்ணாடி டம்ளர்ல இருந்து, அரண்மனை வரைக்கும், அரசர் காலத்துல இருக்கிற மாதிரி இருக்கணும். படத்துல வர்ற நீர்வீழ்ச்சி, கேரளாவுல இருக்கிற, 'சாலக்குடி'ங்கற ஊர்ல எடுத்தது. 98 அடி உயர அந்த நீர்வீழ்ச்சியில், பெரிய பெரிய பாறைகள் போல, 'செட்' போட்டோம். மொத்தம், 200 பேரோட உழைப்பு! படப்பிடிப்பு முடியும் வரைக்கும், ஏதோ ஒரு, 'செட்'டை உருவாக்கிட்டே இருந்தோம். இந்த படத்துக்கு கிடைச்ச வெற்றி, என் வேலையை நிறைவா செஞ்சிருக்கேன்னு நம்ப வைக்குது.
'ஹே ராம், அசோகா, பாகுபலி'ன்னு, சரித்திரப் படங்களா செய்றீங்களே...
அப்படியில்லை! சரித்திர கதைகளை விட, தொழில்நுட்பங்களுடன் வேலை செய்ற 'பியூச்சரிஸ்டிக்'கான நவீன படங்கள் தான், என்னுடைய தேர்வு. ஏற்கனவே, 'எந்திரன், ரா ஒன்' போன்ற, புதுமை கலந்த படங்களும் செஞ்சிருக்கேன். எந்த காலத்து படமா இருந்தாலும், அதுக்கு ஏத்த மாதிரியும், மக்கள் அதை நம்புற மாதிரியும், என்னோட கலை வேலை இருக்கிற மாதிரி பார்த்துப்பேன்.
பெரிய, 'பட்ஜெட்' படங்கள் தான், உங்கள் அடையாளமா?
அவை தான் எனக்கு அடையாளம் கொடுத்ததுன்னு சொல்லலாம். நான் சேர்ந்து வேலை பார்க்கிற கலைஞர்களோட படங்கள், பிரம்மாண்டமா அமைஞ்சிடுது. தமிழ்ல, இப்போ பிரியதர்ஷனோடு பண்ற படம், சின்ன, 'பட்ஜெட்' தான்! அதனால, சின்ன, 'பட்ஜெட்' படங்கள் செய்றதுல, எனக்கு எந்தத் தடையும் இல்லை!
பிரியதர்ஷனுடன் நீங்கள்...
நானும் பிரியனும், கிட்டத்தட்ட 71 படங்கள், 'வொர்க்' பண்ணியிருக்கோம். ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் என்ன புரிதல் இருக்குமோ, அதே புரிதல் தான் எங்களுக்குள்ளேயும்! (சிரிக்கிறார்...) பெரும்பாலும், பிரியன் எனக்கு, 'போன்'லேயே என்ன கதைன்னு சொல்லிடுவார். அப்படி பண்ணின படங்கள் நிறைய, 'ஹிட்'டும் ஆகியிருக்கு.
இயக்குனர் மணிரத்னத்துடன் மீண்டும் இணைவது எப்போது?
அவர்கூட சேர்ந்து, 3 படங்கள் பண்ணியிருக்கேன். அவர் இயக்கிய, 'கடல்,' இயக்கவிருந்த, 'பொன்னியின் செல்வன்' படத்திலேயே, வேலை செஞ்சிருக்கணும். அந்த சமயத்துல, நான் இந்தியில, 'ஓம் சாந்தி ஓம்' படத்தோட, வேலையில பரபரப்பா இருந்ததால, அந்த படங்களை பண்ண முடியாம போச்சு. நிச்சயமா, நாங்க சேர்ந்து, 'வொர்க்' பண்ணுவோம்.
அடுத்த பிரம்மாண்டம்?
'பாகுபலி 2' பட வேலைகள்ல தீவிரமா இருக்கோம். முதல் பாகம் துவங்கினதுல இருந்து, ஒரு நாளைக்கு, மூணு நாலு மணிநேரம் தான் தூக்கம்; ஆனாலும், சோர்வடையல. படத்தோட மிச்சம் இருக்கிற பணிகள், செப்டம்பர் மாதம் துவங்க இருக்கு; அதை, டிசம்பர் மாசத்துக்குள்ளே முடிக்கணும்.