'ஆபரேஷன் சிந்தூர்' : டிரேட் மார்க் பதிவுக்கான விண்ணப்ப சர்ச்சை | 'ரெட்ரோ' ருக்கு - வாழ்த்தியவர்களுக்கு பூஜா ஹெக்டே நன்றி | லாரன்ஸ் உடன் இணையும் மாதவன், நிவின் பாலி | பிறந்தநாளில் சூர்யா 45 பட அப்டேட் | மோகன்லாலின் மலையாள படப்பிடிப்புக்கு விசிட் அடித்த நெல்சன் : ஜெயிலர் 2விலும் நடிப்பது உறுதி | காந்தாரா படப்பிடிப்பில் ஆற்றில் மூழ்கி துணை நடிகர் உயிரிழப்பு | எளிமையாக நடைபெற்ற ரெமோ வில்லனின் திருமணம் | ரெட்ரோ படப்பிடிப்பில் காயம் அடைந்த சிறுமிக்கு உதவிக்கரம் நீட்டிய மம்முட்டி | கலைஞர்களுக்காகவே உருவாக்கப்பட்ட 'குங்குனாலோ' செயலி | அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நடிக்கிறாரா சமந்தா? அவரே வெளியிட்ட தகவல் |
1980களில் அம்பிகா, ராதா என மலையாள நடிகைகள் இறக்குமதியாகி கமர்ஷியலில் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்தபோது மலையாளத்தில் வெளிவந்த ‘‘மஞ்சில் விரிஞ்ச பூக்கள்’’ லவ் ஸ்டோரி தமிழக ஆடியன்சையும் திரும்பிப் பார்க்க வைத்தது. புன்னகையை தேக்கி வைத்திருக்கும் கண்கள், பார்த்தவுடன் பாசம் கொள்ளத் துடிக்கும் குழந்தை முகம் என அப்போதைய பெல்பாட்டம் இளைஞர்களை வசீகரித்தால் பூர்ணிமா ஜெயராம்.
1981ம் ஆண்டு வெளிவந்த ‘‘விதி’’ படம் பூர்ணிமாவை புகழின் உச்சிக்கு கொண்டுசென்றது. கர்ப்பமாக்கி ஏமாற்றிய காதலனை எதிர்த்து வழக்குப்போட்டு அதில் ஜெயித்து, பின் அவனையே வேண்டாம் என்று சொன்ன புரட்சிகர வேடத்தில் நடித்து பெண் ரசிகர்களையும் பெற்றார் பூர்ணிமா. மஞ்சில் விரிஞ்ச பூக்களுக்கு இணையாக இங்கு கிளிஞ்சல்கள் படத்தில் நடித்தார். பயணங்கள் முடிவதில்லை வெள்ளிவிழா நாயகியாக்கியது.
டார்லிங் டார்லிங் படத்தில் நடித்தபோது அதன் டைரக்டர், ஹீரோ கே.பாக்யராஜுடன் காதல் ஏற்பட்டு திருமணமும் செய்துகொண்டார். அதன்பிறகு ரஜினியுடன் தங்க மகன், தியாகராஜனுடன் நீங்கள் கேட்டவை படத்தில் நடித்து கமர்ஷியல் ஹிட் கொடுத்தார். அதற்குள் குடும்ப வாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதால் சினிமாவை விட்டு விலகினார். சாந்தனு, சரண்யா என்ற இரண்டு குழந்தைகளுக்கு தாயானார்.
தன் வாரிசுகள் இருவரையும் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார். நல்ல திறமை இருந்தும் சரண்யா ஏனோ சினிமாவுக்கு செட்டாகவில்லை. ஒரு சில படங்களிலேயே விலகிக்கொண்டார். சாந்தனுவும் அப்படியே... திறமை இருந்தும் இன்னும் போராடிக் கொண்டிருக்கிறார். பாக்யராஜ் அவ்வப்போது படம் இயக்குவது, நடிப்பது என்று தொடர்ந்து கொண்டிருக்கிறார். சினிமாவே வேண்டாம் என்று பேஷன் டிசைன் தொழிலில் பிசியாக இருந்தார் பூர்ணிமா. காலத்தின் கட்டாயம் அவரும் இப்போது மீண்டும் மேக்-அப் பெட்டியை தூக்கிவிட்டார்.
தமிழ் சினிமாவில் எப்போதும் அழகான அம்மாக்களுக்கு தனி வரவேற்பு இருக்கும். இப்போது அந்த வரவேற்பு முழுவதும் பூர்ணிமாவை நோக்கி திரும்பி இருக்கிறது. ஆரம்பத்தில் ஒரு விளம்பர படத்திற்காக கணவருடன் கேமரா முன் நின்றவர் அப்படியே சினிமாவுக்குள் மீண்டும் வந்துவிட்டார். வாய்மை என்ற படத்தில் மகன் நடிப்பதால் அதற்காக ஒத்துக்கொண்டவர். மீண்டும் சினிமாவில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டவர். ஆதலால் காதல் செய்டிர் அவரின் ரீ என்ட்ரியை தொடங்கிவைத்திருக்கிறது.
மகன் கையில் பாட்டிலால் குத்திக்கொண்டு ரத்தம் சிந்திக் கொண்டிருக்கிறான். மகள் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருக்கிறாள். இந்த இருவருக்கும் இடையில் கிடந்து தவிக்கும் ஒரு தாயின் தவிப்பை வெளிப்படுத்திய விதத்தில் இருந்து பூர்ணிமாவுக்குள் இன்னும் அந்த நடிப்பின் ஈரம் இருக்கிறது என்பதை ‘ஆதலால் காதல் செய்வீர்’ உறுதிப்படுத்தியிருக்கிறது. இப்போது ஜில்லாவில் இந்த தலைமுறையின் ஹீரோ விஜய், தன் காலத்திய ஹீரோ மோகன்லால் இருவருடனும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அம்மா, அக்கா, அண்ணி கேரக்டரில் நடிக்க கேட்டு தயாரிப்பாளர்கள் பூர்ணிமாவின் வீட்டு வாசலில் கியூ கட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். பூர்ணிமாவின் அடுத்த ரவுண்ட் தொடங்கியாச்சு. சரண்யா பொன்வண்ணன் போல அவரும் ஒரு தேசிய விருதை எட்டிப்பிடிக்க வாழ்த்துவோம்.