Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

ஹிட் ராசி... ரசிகர்கள் ஆசி...! மதுரையை நோக்கி கோடம்பாக்கம்

Kollywood cinema turns to Madurai-Special reportஹெலிகாப்டர் சகிதமாய் சண்டையிடும் அளவிற்கு, தமிழ் சினிமா வளர்ச்சி கண்டாலும், மதுரையின் மண் மனம் சார்ந்த கதைகள், என்றுமே சோடை போனதில்லை. தமிழகத்தில் மட்டுமின்றி, உலகெங்கும் தமிழர் வாழும் நாடுகளிலும், மதுரையை மையமாக வைத்த கதைகளுக்கு, பெரிய அளவில் வரவேற்பு உள்ளது. கதைகளுக்கும், படப்பிடிப்புகளுக்கும் மட்டுமே மதுரையை பயன்படுத்தி வந்த கோடம்பாக்கம், தற்போது சினிமாவின் முக்கிய நிகழ்வுகளை, மதுரையில் அரங்கேற்றி வருகிறது. இத்தனைக்கும், சம்மந்தப்பட்ட படங்கள் அனைத்துமே, மெகா ஸ்டார்களை உள்ளடக்கியது, என்பது தான், "ஹைலைட்.  "பிரமாண்டமான இசை வெளியீட்டின் மூலம், வெளிவரவிருக்கும் படத்தின் எதிர்பார்பை அதிகரிக்க முடியும், என்ற எண்ணம், தயாரிப்பாளருக்கு இருப்பதால் தான்; லண்டன், மலேசியா, சென்னையின் ஸ்டார் ஓட்டல்களில் "ஆடியோ வெளியீடு நடக்கிறது.  தற்போதைய அந்த நடைமுறை, மதுரை பக்கம் திரும்பி இருக்கிறது. "சினிமாவை ரசிப்பதிலும், தீர்மானிப்பதிலும், மதுரைக்காரன் தான் தேர்ச்சி பெற்றவன், என்பது, "பாக்ஸ் ஆபீஸ் விதிகளில் எழுதப்படாத சட்டம். அதனால் தான், மதுரையில் சினிமாவை பிரபலப்படுத்த தயாராகிவிட்டது, கோடம்பாக்கம்.

சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில், "வெப்சைட் மூலம் தான் பெரும்பாலானோர்,  பாடல்களை "டவுன் லோடு செய்கின்றனர். மதுரையில் தான், அன்றும், இன்றும், பணம் கொடுத்து ஆடியோ "சிடிகள் வாங்குவோர் அதிகம். மதுரைக்காரர்களுக்கு தொழில்நுட்பம் தெரியாமல் இல்லை; விலை கொடுத்து வாங்கும் "சிடியில் "குவாலிட்டி இருக்கும் என்பது, நம்மவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. கோடம்பாக்கம், மதுரைக்கு திசை மாற, இதுவும் ஒரு காரணம்.

மதுரையை மையமாக கொண்ட படம் என்பதால், விருமாண்டியின் ஆடியோ வெளியீடு இங்கு நடந்தது. அதன் பின், விஜய் நடித்த வேலாயுதம், சட்டம் ஒரு இருட்டறை, கமல் நடித்த விஸ்வரூபம், பாரதிராஜா இயக்கிய அன்னக்கொடியும் கொடி வீரனும், என, ரசிகர்களின் உச்ச எதிர்பார்ப்பு கொண்ட படங்களின் ஆடியோ வெளியீடுகள், மதுரையில் நடத்தப்பட்டுள்ளது.

இதில் பிரம்மாண்டம் என்னவென்றால், சென்னையில் நடக்கும் விழாவில் பங்கேற்பதை போலவே, மதுரையிலும் சினிமா நட்சத்திரங்களின் படையெடுப்பு நடக்கிறது. விழாவை காண சென்னையை விட, இருமடங்கு கூடும் ரசிகர் கூட்டம், கோடம்பாக்கத்தை திகைக்க வைத்துள்ளது. "மதுரைக்கு வந்தால், "ஹிட் ராசியும், ரசிகர்களின்  ஏகோபித்த "ஆசியும் இருப்பதால், கோடம்பாக்கம், மதுரை நோக்கி வருவதில் ஆச்சரியமில்லை.

Tags »
Special report, ஸ்பெஷல் ரிப்போர்ட்,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (2)

loki - Chennai,இந்தியா
2013-02-22 09:10:33 Report Abuse
loki மதுரை பெரிய பட்டி காடு
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
பால்பாண்டியன - மதுரை  ( Posted via: Dinamalar Android App )
2013-01-28 08:40:48 Report Abuse
பால்பாண்டியன மாமதுரை போற்றுவோம்
Rate this:
1 members
0 members
3 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

மேலும் ஸ்பெஷல் ரிப்போர்ட்

Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in