தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
துப்பறிவாளன் படத்திற்கு பிறகு விஷால் நடிக்கும் படம் இரும்புத்திரை. இதில் சமந்தா ஹீரோயின், அர்ஜூன் வில்லன் இவர்களுடன் டெல்லி கணேஷ், ரோபோ சங்கர், வின்செண்ட் அசோகன் நடித்துள்ளனர். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார், யுவன் இசை அமைக்கிறார்.
வருகிற பொங்கல் பண்டிகை வெளியீடாக படம் அறிவிக்கப்பட்டது. இதனால் குற்றாலம், தென்காசி, அம்பாசமுத்திரம் பகுதியில் தொடர்ச்சியாக படமாக்கப்பட்டது. இறுதி பட்ட படப்பிடிப்பு சென்னையில் கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. விஷால், சமந்தா தொடர்பான பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டது. நேற்றுடன் இதன் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
இதை படப்பிடிப்பு குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். சமந்தா விஷால் உள்ளிட்ட அனைவருக்கும் கேக் ஊட்டி மகிழ்ச்சிடன் விடைபெற்றார். படத்தின் டப்பிங், பின்னணி இசை கோர்ப்பு பணிகள் ஏற்கெனவே தொடங்கி நடந்து வருகிறது. இனி தீவிரமாக நடக்கும். இதில் விஷால் ராணுவ மேஜராக நடித்திருக்கிறார்.