வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் |
தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மகன், இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் சகோதரர் உதயா. திருநெல்வேலி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு கலகலப்பு, சக்கலக்கபேபி, கணபதி வந்தாச்சு. உன்னை கண் தேடுதோ, பூவா தலையா, ரா ரா படங்களில் நடித்தார். ஆனால் எந்த படமும் உதயாவுக்கு கை கொடுக்கவில்லை. தலைவா படத்தில் விஜய்யுடன் நடித்தார், அதன் பிறகு ஆவிகுமார் படத்தில் நடித்தார். இவையும் கை கொடுக்கவில்லை.
உதயாவுக்கு இப்போது தேவை ஒரு கட்டாய வெற்றி. இதற்காக அவரே சொந்தமாக தயாரித்து நடித்து வரும் படம்தான் உத்தரவு மகாராஜா. இதில் அவருடன் பிரபுவும் நடிக்கிறார். ஆசிப் குரைசி என்ற புதுமுகம் இயக்குகிறார். பாலாஜி ரங்கா இசை அமைக்கிறார் நரேன்பாலகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
பிரபு சொல்கிற வேலையை எல்லாம் செய்து முடிக்கிற அடியாளர் உதயா. அவரே கிளர்ந்து எழுந்து பிரபுவை வேலை செய்ய வைக்கிற கதை. சஸ்பென்ஸ் திரில்லர் பாணியில் உருவாகும் காமெடி படம். இதில் உதய 9 கெட்அப்களில் நடித்து வருகிறார். உடம்பு எடையை கூட்டி, குறைத்து, அதிக முடி வளர்த்து, மொட்டை அடித்து என உழைப்பு, திறமை அனைத்தையும் கொட்டி உத்தரவு மகாராஜாவை உருவாக்கி வருகிறார்.