10 வருடங்களுக்குப் பிறகு சிம்பு, சந்தானம் கூட்டணி | லாரன்ஸ், ஜேசன் சஞ்சய் படங்களில் நடிக்கும் டூரிஸ்ட் பேமிலி கமலேஷ் | அனிருத்துக்கு விஜய் தேவரகொண்டா எழுதிய காதல் கடிதம்! | காதலருடன் வந்து பாட்டிக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜான்வி கபூர் | தெலுங்கு இயக்குனர்களின் இயக்கத்தில் சூர்யா, கார்த்தி | இயல்புக்கு மீறிய படங்களை எதிர்பார்க்கும் ரசிகர்கள் : நாகார்ஜுனா | மலையாள படத்திற்காக பஹத் பாசிலுடன் மோதும் அர்ஜுன் தாஸ் | பழங்குடியினரை அவமதிக்கும் விதமாக பேசியதாக விஜய் தேவரகொண்டா மீது போலீஸில் புகார் | போனி கபூர், அனில் கபூரின் தாயார் மறைவு | எந்த காலத்திலும் அரசியலுக்கு 'நோ': அஜித் பேட்டி |
25 வருடங்களுக்கு முன் டி.கே.ராஜீவ்குமார் இயக்கத்தில் 'சாணக்யன்' என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார் கமல்ஹாசன்! மிமிக்ரியை மையமாக வைத்து த்ரில்லர் படமாக எடுக்கப்பட்டிருந்த இப்படம் கேரளத்தில் பெரிய வெற்றியை பெற்றது. தமிழ்நாட்டில் சென்னை போன்ற பெருநகரங்களிலும் 100 நாட்கள் ஓடியது. சாணக்யன் படத்தை தொடர்ந்து 25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கமல்ஹாசனும், இயக்குநர் டி.கே.ராஜீவ்குமாரும் ஒரு படத்தில் இணைகின்றனர். இப்படம் ஃபேமிலி என்டர்டெயின்மென்ட் படமாக உருவாக இருக்கிறதாம். இப்படத்திற்கு தமிழில் 'அப்பா அம்மா விளையாட்டு' என்றும் தெலுங்கில் 'அம்மா நானா ஆட்டா' என்றும் டைட்டில் வைத்திருக்கின்றனர்.
ஹிந்தி பதிப்பிற்கான பெயர் இன்னும் முடிவாகவில்லை. 'பேசும்படம்', 'சத்யா' படங்களில் கமல்ஹாசனுடன் நடித்த அமலா அக்கினேனி இந்தப்படத்தில் கதாநாயகயாக நடிக்கிறார். வயதான கமலுக்கு ஜோடியாக, பாலிவுட் நடிகை செரீனா வாஹப் நடிக்க இருக்கிறார்! இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளில் உருவாக இருப்பதாக முதலில் கூறப்பட்டது. இப்போது என்ன காரணத்தினாலோ மலையாளம் வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் எடுக்க திட்டமிட்டுள்ளார்கள்! இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் துவங்விருக்கிறது. 'தூங்காவனம்' படத்தைத் தொடர்ந்து கமல்ஹாசன் நடிக்க உள்ள படம் இதுதான். இந்தப் படத்தை முடித்த பிறகே லிங்குசாமியின் தயாரிப்பில் நடிக்க இருக்கிறார் கமல்.