சினிமாவில் என்ட்ரி கொடுத்த போது குட்டை பாவாடை நடிகையாக வலம் வந்த நான்கெழுத்து மும்பை நடிகை, மார்க்கெட் சூடு பிடித்ததும் இழுத்து போர்த்திக் கொண்டார். ஆனால், இப்போது மார்க்கெட் சரிந்து கிடப்பதால், மறுபடியும் குட்டை பாவாடை கலாசாரத்தை கையில் எடுத்திருப்பவர், சினிமா வட்டாரங்களில் உள்ள நரைமுடி தயாரிப்பாளர்களை, 'கிளு கிளு'ப்பேற்றி புதிய படங்களுக்காக அஸ்திவாரம் போட்டு வருகிறார்.
23 ஏப், 2018 - 00:00
பீட்சா நடிகர் படத்தில் நடித்த கன்னட நடிகை, தமிழில் மெகா ரவுண்டு வரவேண்டுமென்று கோடம்பாக்கத்தில் முகாமிட்டார். ஆனால், 'எங்க அப்பா பெரிய ராணுவ அதிகாரி; நான், பெரிய இடத்துப் பெண்...' என்று ஏகப்பட்ட, 'பில்டப்'களை அம்மணி கொடுத்ததால், அவரை யாருமே ஏறெடுத்துப் பார்க்கவில்லை. இதனால், போணியாகாமல் கிடக்கிறார்.
23 ஏப், 2018 - 00:00
இரண்டெழுத்து படத்தில் நடித்தபோது, அப்பட நாயகனுடன் நடிக்கும் காட்சிகளில், தான் மட்டுமே ஸ்கோர் பண்ண வேண்டும் என்று அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல், அவரை வெறுப்பேற்றி வந்துள்ளார், பிரேமம் நடிகை. அதற்கு, இயக்குனரும், உறுதுணையாக இருந்ததால், கடுப்பான நாயகன், இப்போது, அப்படத்தின் பிரமோஷன்களில் கலந்து கொள்வதை தவிர்த்து வருகிறார். அத்துடன், நடிகையை பற்றி, நடிகர்கள் வட்டாரத்தில் சொல்லி, அவர் மீது அதிருப்தியை உருவாக்கி வருகிறார்.
14 ஏப், 2018 - 00:00
வாரிசு இசையமைப்பாளரின் மார்க்கெட், தற்போது சரிந்து வருவதால், தன் மார்க்கெட்டை துாக்கி நிறுத்தும் முயற்சியாக, ஏற்கனவே, தான் இசையமைத்த படங்களில் நடித்த முன்னணி கதாநாயகர்களின் படங்களுக்கு இசையமைக்க, தீவிர முயற்சி எடுத்து வருகிறார். ஆனால், சமீபகாலமாக அவர் இசையமைத்த பாடல்கள் எதுவும் ஹிட் லிஸ்டில் இடம் பிடிக்காததால், அவரது பிடிக்குள் அகப்படாமல் நழுவிச் செல்கின்றனர், கதாநாயகர்கள். இதனால், கடும் அதிர்ச்சியில் உள்ளார், வாரிசு.
14 ஏப், 2018 - 00:00
கணவரை விவாகரத்து செய்த பின், கேரளத்து பால் நடிகையின் இமேஜ் ரொம்பவே, 'டேமேஜ்' ஆகிவிட்டது. குறிப்பாக, சில இளவட்ட நடிகர்களின் அந்தரங்க தோழியாக உள்ளதாக செய்திகள் வெளியானதை அடுத்து, மேற்படி நடிகர்களின் வீடுகளில் நடிகையை சந்திக்க தடைச் சட்டம் பிறப்பித்துள்ளனர். அத்துடன், அந்த நடிகையுடன் நடிக்கக் கூடாது என்று சில நடிகர்களின் வீடுகளில் தடை போட்டு விட்டனர். இதனால், அதிர்ச்சியான நடிகை, இனிமேல் அந்தரங்க சந்திப்புகளை நிறுத்தினால் தான் கோலிவுட்டில் கோலோச்ச முடியும் என்பதால், இப்போது, ரொம்ப நல்லவராக தன்னை வெளி உலகத்துக்கு காட்டிக்கொள்ளும் வேலைகளில் இறங்கியுள்ளார்.
06 ஏப், 2018 - 00:00
மகனை தமிழில் அறிமுகம் செய்துள்ள, நான்கெழுத்து மலையாள நடிகர், தன் மகன் நடித்த முதல் படமே தோல்வியடைந்து விட்டதால் அதிர்ச்சியடைந்துள்ளார். அதனால், மகனின் எதிர்காலம் பிரகாசமாக அமைய வேண்டும் என்று, சமீபத்தில் ஒரு மலையாள மாந்திரீகரிடம், சிறப்பு பூஜை நடத்தியுள்ளார்.
06 ஏப், 2018 - 00:00
புன்னகை இளவரசி நடிகையை, மெரினா நடிகர் படத்தில், மெகா ரோல் என்று சொல்லி, டம்மி பண்ணி விட்டதால், அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாமல் இருக்கிறார். அதன் காரணமாக, இயக்குனர்கள் யாராவது அவரை நடிக்க அழைத்தால், 'மொத்த சீன் பேப்பரையும் என்னிடம் தரவேண்டும்; அதில், எனக்கு தரப்படும் காட்சிகளை சொன்னபடி படமாக்குவதோடு, படம் வெளியாகும் போதும், அந்த காட்சிகள் படத்தில் இருக்கும் என்ற உத்தரவாதம் தரவேண்டும்...' என்று பாண்டு பேப்பரை எடுத்து நீட்டுகிறார். அதைக்கேட்டு, 'இது என்ன புதுக்கதையா இருக்கு...' என்று அதிர்ச்சியடைந்துள்ளனர், இயக்குனர்கள்.
06 ஏப், 2018 - 00:00
நான் ரொம்ப ஆச்சாரமான பொண்ணு; கவர்ச்சி காட்ட மாட்டேன் என்று கறாராக சொல்லி வந்த ராஜதந்திரம் நடிகை, தன் படக்கூலி பல ஆண்டுகளாக மந்தமாகவே இருந்ததால், அதை உயர்த்தும் முயற்சியாக, தற்போது, சில படங்களில் கட்டவிழ்ந்து நிற்கிறார். அதனால், இதுவரை அவருக்கு சில லகரங்களை மட்டுமே கொடுத்து வந்த தயாரிப்பாளர்கள், அவரது திடீர் தாராளத்தை பார்த்து, சம்பளத்தை தாராளமாக வழங்க துவங்கியிருக்கின்றனர்.
31 மார், 2018 - 00:00
தளபதியுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ள வாரிசு நடிகை, முன்பெல்லாம் நடன மாடும் போது நடிகர்கள், தப்பித் தவறி தன் இடுப்பில் கை வைத்து விட்டால், கூச்சத்தில் கத்தி விடுவார். ஆனால், இப்போது, நடிகையிடமிருந்த கூச்சம் அடியோடு காணாமல் போய் விட்டது. அதுமட்டுமின்றி, சினிமாவில் அறிமுகமானதில் இருந்தே நடிகர்களின் வேன் பக்கமே செல்லாமல் இருந்து வந்த நடிகை, இப்போது, சின்ன, 'கேப்' கிடைத்தாலும், வேனுக்குள் புகுந்து, நடிகர்களுடன் கடலை போடுவதையே பொழுது போக்காக்கி விட்டார்.
31 மார், 2018 - 00:00
வம்பு நடிகர் தான் அவ்வப்போது பிரச்னைகளை ஏற்படுத்துவார். ஆனால், இப்போது, அவர் கடைசியாக நடித்து வெளியான படம் ஓடாததற்கு, அவரை காரணம் சொல்லி, அவரிடம் நஷ்ட ஈடு கேட்டு வருகிறார், அப்பட தயாரிப்பாளர். அத்துடன், வம்பு நடிகருக்கு எப்படியேனும், 'ரெட் கார்டு' போட்டே தீருவது என்றும் அவர் வரிந்து கட்டி நிற்கிறார். அதனால், இதுவரை யாருக்குமே பயப்படாமல் இருந்து வந்த வம்பு நடிகர், முதன் முறையாக அந்த தயாரிப்பாளரிடம் பயப்படத் துவங்கியுள்ளார்.
23 மார், 2018 - 00:00
வாரிசு நடிகர் நடித்து வந்த, போத படம், பைனான்ஸ் பிரச்னையில் நிற்கிறது. குறிப்பாக, அப்படத்தில் நடிக்கும் சில கதாநாயகியருக்கு சம்பள பாக்கி இருந்ததால், அம்மணிகள், படப்பிடிப்புக்கு, 'டேக்கா' கொடுத்து வந்தனர். இந்நிலையில், அந்த நடிகையருக்கு, தான் அடுத்தபடியாக நடிக்கும் படங்களில் நடிக்க, சிபாரிசு செய்த நடிகர், அதற்கு பிராயசித்தமாக, தன் படத்தில் நடித்து தர வேண்டும் என்று மேற்படி நடிகையரை கேட்டுக் கொண்டுள்ளார்.
23 மார், 2018 - 00:00
தளபதி நடிகரும், எதிர்காலத்தில் அரசியல் கோதாவில் குதிப்பார் என்று அவரது ரசிகர்கள் நம்பியிருந்தனர். ஆனால், நடிகரின் தந்தைகுலம், சமீபத்தில் ஒரு பட விழாவில் பேசும்போது, 'இப்போது அரசியல் ரொம்ப கெட்டுக் கிடக்கிறது; அதனால், என் மகனை அரசியலுக்கு கொண்டு வரும் எண்ணமே இல்லை...' என்று திட்டவட்டமாக பேசினார். அதையடுத்து, தளபதியை நம்பிக் கொண்டிருந்தால், தங்களுக்கு வாழ்க்கை இருக்காது என்று, அவரது ரசிகர் மன்றத்திலுள்ள சில முக்கிய நிர்வாகிகள், புதிதாக அரசியலில் பிரவேசித்துள்ள இரு உச்ச நடிகர்களின், ரசிகர் மன்றங்களை தேடிச் செல்ல ஆரம்பித்துள்ளனர்.