ரன் நடிகையின் மார்க்கெட் மறுபடியும் சூடுபிடிக்கத் துவங்கியிருப்பதால், மீண்டும் வெயிட் குறைத்து கோலிவுட்டில் விஜயம் செய்து வருகிறார். அதோடு, தன் மாஜி ஹீரோக்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து, வில்லி மற்றும் கேரக்டர் ரோல்களில் நடிக்க சிபாரிசு செய்யுமாறும் அன்பு வேண்டுகோள் விடுத்து வருகிறார் நடிகை.
16 ஜூன், 2018 - 00:00
பாலிவுட்டில் இருந்து இறக்குமதியாகியுள்ள, வனமகன் நடிகை, ஒரே நேரத்தில் மூன்று முன்னணி நடிகர்களின் படங்களை கைப்பற்றி கோலிவுட் நடிகைகளுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார். அதோடு, பாடல் காட்சிகளில் ஏராளமான கவர்ச்சி காட்டி அம்மணி நடிப்பதால், கோலிவுட்டின் கமர்ஷியல் படாதிபதிகள், நடிகைக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்துள்ளனர்.
11 ஜூன், 2018 - 00:00
சில படங்களின் தொடர் தோல்வி காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார், பிச்சைக்காரன் நடிகர். அதையடுத்து, 'இனிமேல் யாராக இருந்தாலும், கதை பிடித்தால் மட்டுமே நடிப்பேன். அதனால், நட்பை முன் வைத்து யாரும் என் வீட்டுப் பக்கம் வராதீர்கள்...' என்று தன்னை முற்றுகையிட்ட நட்பு வட்டார இயக்குனர்களை விரட்டியடித்து விட்டார் பிச்சைக்காரன்.
11 ஜூன், 2018 - 00:00
அட்டகத்தி நடிகையின் மார்க்கெட் குடை சாய்ந்து கிடப்பதால், மேல்தட்டு நடிகர்களுடன் குத்தாட்டம் ஆடவும் தான் தயாராக இருப்பதாக கூறி வருகிறார். அதோடு, குத்துப்பாட்டு நடிகைகளுக்கேற்ப டூ-பீஸ் கலாசாரத்தை கையில் எடுக்கவும் தான் தயாராக இருப்பதாக கூறி, கமர்ஷியல் பட இயக்குனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார் நடிகை.
19 மே, 2018 - 00:00
பையா நடிகைக்கு, கோலிவுட்டில் சிபாரிசு செய்து வந்த நடிகர்கள், இப்போது வேறு நடிகைகளின் பக்கம் சாய்ந்து விட்டனர். இதனால், அந்த நடிகர்கள் மீது கோபத்தில் இருக்கும் நடிகை, அவ்வப்போது சரக்கு அடித்து விட்டு, மேற்படி நடிகர்களுக்கு போன் போட்டு சகட்டு மேனிக்கு திட்டித் தீர்த்து வருகிறார். இதனால், ராத்திரி நேரங்களில், அம்மணியின் போன் கால் வருகிறது என்றாலே மேற்படி நடிகர்கள் போனையே, சுவிட்ச் ஆப் செய்து விடுகின்றனராம்.
19 மே, 2018 - 00:00
அருந்ததி நடிகை, பாகுபலி நாயகனை திருமணம் செய்து கொள்ளப்போவதாக வெளியான செய்தியை இருவருமே மறுத்தனர். ஆனால், இப்போது கடைசியாக அவர், நான்கெழுத்து படத்தில் நடித்த மலையாள நடிகருடன் நெருங்கி பழகி வருவதாகவும், அவர்கள் இருவரும் திருமண பந்தத்தில் இணைய வாய்ப்பிருப் பதாகவும் தற்போது செய்திகள் கசிந்துள்ளன.
12 மே, 2018 - 00:00
திருமணத்திற்கு பின், பாணா காத்தாடி நடிகைக்கு, குடும்பத்தார் கிடுக்கிப்பிடி போடுவதாக அவரை ஓரங்கட்டினர், தயாரிப்பாளர்கள். ஆனால், நடிகையோ, 'எனக்கு என் குடும்பத்தில் எந்த கட்டுப்பாடும் இல்லை; சினிமாவில் எப்படி வேண்டுமானலும் நடிக்கலாம்...' என்று முழு சுதந்திரம் கொடுத்துள்ளனர் எனச் சொல்லி, மீண்டும் படு கவர்ச்சியாக நடிப்பதற்கு சம்மதம் சொல்லி, பட வேட்டையில் ஈடுபட்டுள்ளார்.
12 மே, 2018 - 00:00
களவாணி நடிகை, பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது, தன்னை தேடி வந்த படங்களில் நடிக்க அதிகப் படியான சம்பளம் கேட்டதால், சில பெரிய படங்கள் பின்வாங்கி விட்டன. அதனால், இப்போது அடக்கி வாசித்து வரும் நடிகை, மீண்டும் டூ - பீஸ் கலாசாரத்தை கையில் எடுக்கப்போவதாக சொல்லி, கமர்ஷியல் பட தயாரிப்பாளர்களிடம் சான்ஸ் கேட்டு துரத்தி வருகிறார்.
12 மே, 2018 - 00:00
மூன்றெழுத்து பூ நடிகை, அரசியலில் ஈடுபட்டு வந்தபோதும், சினிமா மூலம் மக்களை சந்தித்து வந்தால் தான் நம்மை ஞாபகம் வைத்திருப்பர் என எண்ணி, கேரக்டர் நடிகையாக வலம்வர தயாராகி விட்டார். அதனால், தல - தளபதி போன்ற நடிகர்களின் படங்களில் நடிக்க அவர்களின் சிபாரிசை நாடியுள்ளார்.
05 மே, 2018 - 00:00
பீட்சா நடிகருக்கு மார்க்கெட் இருந்தபோதும், குறைவான சம்பளத்தில் தான் நடித்து வந்தார். ஆனால், தற்போது அவரும் மற்றவர்களைப் போன்று கோடிகளை சொல்லியடித்து வருகிறார். அத்துடன், ஸ்டார் ஓட்டல் மற்றும் கேரவன் வசதி என அனைத்தும் நவீனமாக இருக்க வேண்டும் என்று, மெகா கண்டிஷன்களை போடுவதால், அவரை ஒப்பந்தம் செய்ய வரும் தயாரிப்பாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
05 மே, 2018 - 00:00
சமீபத்தில் ஒரு சினிமா மீட்டிங்கில், நடிகர்கள், தங்களது சம்பளத்தை குறைக்குமாறு தயாரிப்பாளர்கள் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. அப்போது, அங்கு வந்த வம்பு நடிகர், 'நாங்கள் சம்பளத்தை குறைக்கிறோம்; ஆனால், முதலில் நீங்கள் பிளாக் மணியை தவிர்த்து, ஒயிட் மணியில் படமெடுக்கிறோம் என்கிற ரெக்கார்டை காட்டுங்கள். அதன்பின், நடிகர்கள் சம்பளத்தை குறைப்பதை பற்றி யோசிக்கலாம்...' என்று சொன்னார். அதைக்கேட்டு, வாயடைத்து போயினர், தயாரிப்பாளர்கள்.
28 ஏப், 2018 - 00:00
பீட்சா நடிகரின் பாசறைக்குள் இருந்து வெளியேறிய, காக்கா முட்டை நடிகை, தற்போது, சில மேல்தட்டு இயக்குனர்கள் மூலம் முன்வரிசை நடிகர்களின் படங்களுக்கு கல்லெறிந்து வருகிறார். மேலும், திரையுலகில் நடக்கும், 'மிட்நைட்' பார்ட்டிகளுக்கு அழையா விருந்தாளியாக ஆஜராகி, நடிகர்களுடன் லுாட்டி அடித்து, நட்பு வளர்க்கத் துவங்கியுள்ளார்.