தல நடிகரை போன்று பைக் ரேசில் பிரபலமாகப் போவதாகச் சொல்லி, நடிப்பில் ஆர்வம் இல்லாமல் ரேஸ் மைதானத்திலேயே கிடந்தார், இரண்டெழுத்து நடிகர். ஆனால், அதிலும் பெரிதாக சாதிக்க முடியாத நிலையில், சினிமாவில் இருந்த மார்க்கெட்டும் போய் விட்டதே என்று அதிர்ச்சியடைந்த நடிகர், 'இருக்கிறதை விட்டுவிட்டு, பறக்க ஆசைப்பட்டு, இருந்த வாழ்க்கையையும் தொலைத்து விட்டேனே...' என்று, இப்போது கிடைத்த சம்பளத்தில் சில படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார். ''ஹலோ, யாருப்பா... ஜெய்தானே பேசுறது... நான், வெங்கட்பிரபு பேசறேன்... பார்ட்டின்னு ஒரு படம் பண்றேன். நீதான் நடிக்கணும். உடனே வாய்யா!''
04 ஆக, 2018 - 00:00
தளபதி நடிகரின் நான்கெழுத்து படம் ஏற்கனவே அரசியல் சர்ச்சையில் சிக்கியது. அதையடுத்து இப்போது அவர் நடித்து வரும், புதிய நான்கெழுத்து படத்திலும், அரசியல் அதிரடி வசனங்கள் துாக்கலாகவே உள்ளதாம். இதையடுத்து, தளபதி படத்தில், அரசியல் நெடி ஜாஸ்தியாக இருப்பதாக தமிழக அரசியல் வட்டாரங்களில் காட்டுத்தீயாக செய்தி பரவிக்கொண்டிருக்கிறது. விளைவு, 'சென்சாருக்கு வரும்போது, படத்தை ஒருவழி பண்ணி விடலாம்...' என்று அரசியல் வட்டாரங்கள், மீனுக்காக காத்திருக்கும் கொக்காகி விட்டனர். இந்த சேதி தளபதியின் காதுக்கு சென்றதை அடுத்து, 'ஓவர்டோஸ் வேண்டாம், கொஞ்சம் அரசியல் நெடியை குறைத்து விடலாம்...' என்று இயக்குனருடன், 'டிஸ்கஸ்' பண்ணி, சில அதிரடி காட்சிகளை அப்புறப்படுத்த முடிவு செய்துள்ளனர்.
23 ஜூலை, 2018 - 00:00
தன்னை காதலித்த விஷயத்தையும், தன்னைப் பற்றி தவறாக பேட்டி கொடுத்ததாலும், பாணா காத்தாடி நடிகை மீது செம கடுப்பில் இருக்கிறார், சம்பந்தப்பட்ட நடிகர். அதோடு, 'இந்த நடிகையை விடவும் ஒரு நல்ல பெண்ணை திருமணம் செய்து, அவர் முன், தான் சிறப்பாக வாழ்ந்து காட்ட வேண்டும்...' என்பதும், மேற்படி நடிகரின் லட்சியமாக உள்ளது.
23 ஜூலை, 2018 - 00:00
மறுபிரவேசம் செய்துள்ள அங்காடி நடிகை, வந்த வேகத்தில் அதிரடியாக படங்களை கைப்பற்றி விடவேண்டும் என்று நினைப்பவர், சில இளவட்டங்களுடன் நட்பு வளர்த்து, புதிய படங்களில் வேகமாக ஒப்பந்தமாகி வருகிறார். அதேசமயம், முதல் ரவுண்டில் மிட்நைட் மசாலா நடிகையாக கோலிவுட்டில் வலம் வந்த அம்மணி, இம்முறையும் அதே போன்று வந்தால், தன் பெயர் மீண்டும், 'டேமேஜ்' ஆகிவிடும் என்பதற்காக, பார்ட்டிகளுக்கு விசிட் அடிப்பதை நிறுத்தி, கேரவனுக்குள்ளேயே பார்ட்டி கொடுத்து, வருகிறார், நடிகை.
14 ஜூலை, 2018 - 00:00
ஓவியமான அந்த நடிகை, சினிமாவில் விட்ட மார்க்கெட்டை மீண்டும் கைப்பற்றியிருக்கிறார். அதேசமயம், இம்முறை வெகு விரைவிலேயே வீழ்ந்து விடக்கூடாது என்பதற்காக, மேல்தட்டு நடிகர்களுடன் நடித்து, மார்க்கெட்டை ஸ்டெடி பண்ண திட்டம் தீட்டி வருகிறார். அதற்காக, மேல்தட்டு நடிகர்களுக்கு கதை சொல்லி, கால்ஷீட்டுக்காக காத்திருக்கும் இளவட்ட இயக்குனர்களுடன் நட்பு வளர்க்கும் நடிகை, அவர்களுக்கு, 'வீக் எண்ட் பார்ட்டி'யும் கொடுத்து, தன் மேல்தட்டு ஆசையை, 'ஓப்பன்' பண்ணி வருகிறார்.
14 ஜூலை, 2018 - 00:00
பப்ளிமாஸ் நடிகையின் மார்க்கெட் சரிந்து விட்டதால், தமிழ் சினிமா மீதான நம்பிக்கை அவருக்கு போய் விட்டது. அதோடு அவரை படங்களுக்கு, ஒப்பந்தம் பண்ணியவர்களும், புதுமுக நடிகைகளுக்கு கொடுப்பது போன்று சம்பளம் கொடுக்க, ரொம்பவே கடுப்பாகி விட்டார் நடிகை. அதனால், சென்னையில் தங்கினால், ஸ்டார் ஓட்டல்களுக்கு பில் கட்ட முடியாது என்பதால் மும்பைக்கே சென்று விட்டார், நடிகை.
06 ஜூலை, 2018 - 00:00
சுள்ளான் நடிகரால் அரவணைக்கப்பட்டிருந்த அந்த பால் நடிகை, மீண்டும் அவரை நாடி வந்து, வாய்ப்பு கேட்டுள்ளார். ஆனால், நடிகரோ, 'மீண்டும் நாம் இணைந்து நடித்தால், என் குடும்பத்தில் புயல் அடிக்காது, சுனாமியே அடிக்கும்...' என்று சொல்லி, நடிகையை துரத்தியடித்து விட்டார்.
06 ஜூலை, 2018 - 00:00
சிவாஜி கேர்ள் நடிகை, ரஷ்யாவை சேர்ந்த பாய் பிரண்டை திருமணம் செய்த கையோடு மீண்டும் அரிதாரம் பூசி வருகிறார். அதோடு, இப்போதைக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் ஐடியாவே இல்லை என்று கூறும் அவர், திருமணமான நடிகை என்று தன்னை யாரும் ஓரங்கட்டி விடக்கூடாது என்பதற்காக அந்த சுவடே தெரியாத அளவுக்கு, புதுவரவு நடிகையருடன் போட்டி போடும் அளவுக்கு, 'பிட்' துணிகளை அணிந்தபடி ஸ்பாட்டுக்கு விசிட் அடித்து, அதிர வைக்கிறார்.
06 ஜூலை, 2018 - 00:00
மெரினா நடிகருடன் ஆரம்ப காலத்தில் நடித்த சில நடிகைகள், அவருடன் நடிக்க சிபாரிசு கோரி துரத்தி வந்தனர். ஆனால், இந்த, 'டார்ச்சர்' அதிகரித்ததால், தற்போது, தன் மொபைல் நம்பரை மாற்றி, அதை ரகசியமாக பாதுகாத்து வருகிறார் நடிகர்.
30 ஜூன், 2018 - 00:00
மூத்த நடிகர்களுடன், 'டூயட்' பாட வேண்டும் என்றால், தான் வழக்கமாக வாங்கும் படக் கூலியிலிருந்து இரு மடங்கு வேண்டும் என்கிறார் தாரா நடிகை. இதே சம்பளத்தை தெலுங்கு மெகா நடிகரின் படத்தில் நடிப்பதற்கும் அம்மணி கேட்டதால், நடிகை மீது அவர் செம கோபத்தில் இருக்கிறார்.
30 ஜூன், 2018 - 00:00
தன் மூன்றாவது காதலரை பெரிய இயக்குனராக்கி விட வேண்டும் என்று முழுவீச்சில் செயல்படுகிறார் தாரா நடிகை. அதனால், ஏற்கனவே ஒரு மூன்றெழுத்து முன்னணி நடிகரிடத்தில் அவருக்கு கால்ஷீட் வாங்கிக்கொடுத்த தாரா, தற்போது காதலர் இயக்கத்தில், தளபதி நடிகரை நடிக்க வைக்கவும் சீரியசாக சிபாரிசு செய்து கொண்டிருக்கிறார்.
23 ஜூன், 2018 - 00:00
தளபதி நடிகருடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ள அந்த வாரிசு நடிகையின் கெடுபிடி அதிகரித்து விட்டது. இயக்குனர் கதை சொல்லி முடித்ததும், தனக்கான காட்சிகளில் திருத்தம் சொல்கிறாராம். குறிப்பாக, ஹீரோக்களுக்கு இணையாக தன் கதாபாத்திரமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும், என்கிறார். நடிகையின் இந்த திடீர் கெடுபிடி, இயக்குனர்களுக்கு, அவர் மீது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.