வாரிசு நடிகரின் படத்தில், 'பிகினி' நடிகையாக உருவெடுத்த, அந்த மூன்றெழுத்து நடிகைக்கு, அதன் பின், கொஞ்ச நஞ்சமிருந்த மரியாதையும் போய்விட்டது. குத்துப்பாட்டு நடிகை அளவிற்கு, அவரை தோலுரிக்கும் கதைகளுடன் முற்றுகையிட்டு வருகின்றனர் இயக்குனர்கள். அதோடு, இப்போது அம்மணி நடித்து வரும் படங்களிலும், ஆபாச நடிகையாக்க காய் நகர்த்துகின்றனர். இதனால், 'ஆசைக்கு ஒரு படத்தில், 'பிகினி' உடையணிந்து நடித்த என்னை, இப்போது முழு நேர ஆபாச நடிகையாக்கி விடுவர் போலிருக்கே...' என்று அதிர்ச்சியில் காணப்படுகிறார், நடிகை.
27 நவ, 2018 - 00:00
கூத்து படத்தில் அறிமுகமான அந்த நடிகை, படவாய்ப்புகளை பெருக்கும் முயற்சியாக, மேல்தட்டு கதாநாயகர்களை, கடைக்கண் பார்வையால் வீழ்த்தி வருகிறார். அதோடு, சிபாரிசு செய்தால், 'மிட்நைட் பார்ட்டி' கொண்டாட்டத்திற்கும், 'டபுள் ஓகே' சொல்லி, மெகா படங்களை உஷார் பண்ணி வருகிறார், நடிகை. இதனால், கோலிவுட்டில் அம்மணிக்கு, மார்க்கெட் அதிகரித்துள்ளது.
27 நவ, 2018 - 00:00
களவாணி நடிகை, எப்போதுமே, ஆண் நண்பர்களுடன் ஊர் சுற்றி வருவார். சமீபத்தில், 'மீ டூ' விவகாரம் வெடித்தபோது, 'இப்படி, 'பப்ளிக்'காக ஊர் சுற்றி, நடிகையரின் பெயரை கெடுக்காதே...' என்று அவரை கண்டித்துள்ளனர், சில நடிகையர். அதையடுத்து, ஆண் நண்பர்களுடன் பொது வெளியில் சுற்றித் திரிவதை நிறுத்தி, ஸ்டார் ஓட்டல்களில் சந்திப்புகளை நடத்தி வருகிறார்.
10 நவ, 2018 - 00:00
மீண்டும் முன்வரிசை நடிகர்களுடன், 'டூயட்' பாடி விட முண்டியடித்தார், பையா நடிகை. ஆனால், அம்மணி எடுத்த ஒவ்வொரு முயற்சியும், ஜாண் ஏறினால் முழம் சறுக்கிய கதையாகி விட்டது. காரணம், ஒரு காலத்தில் நடிகையை வர்ணித்த, மேல்தட்டு சினிமாக்காரர்கள், இப்போது அவரை, 'ரிஜக்டட் பீஸாக' கருதி, ஓரங்கட்டுகின்றனர்.
10 நவ, 2018 - 00:00
அந்த வாரிசு நடிகை, முன்பெல்லாம் செம பந்தோபஸ்துடன் ஸ்பாட்டுக்கு வந்திறங்குவார். அவருடன் நடிக்கும் ஹீரோக்கள் கூட இரண்டொரு வார்த்தை பேச முடியாத அளவுக்கு நடிகைக்கு கட்டுக்காவல் இருந்தது. ஆனால், இதை காரணம் காட்டியே, மேல்தட்டு நடிகர்கள், அம்மணிக்கு ஆதரவுக்கரம் நீட்ட மறுத்தனர். இதனால், தன் கட்டுக்காவலை ஓரங்கட்டி, சகஜமாக, சரளமாக பேசத் துவங்கியிருக்கிறார். அதிலும், நடிகர்களின் மனதில் ஸ்டிராங்காக இடம் பிடிக்க வேண்டும் என்று, ஸ்பாட்டில் சிறிய இடைவெளி கிடைத்தாலும், செம கடலை போட்டு, அவர்களை தன் வலைக்குள் விழ வைத்து வருகிறார்.
27 அக், 2018 - 00:00
பிரமாண்ட இயக்குனர் தயாரித்த இரண்டாம் பாகம் படத்தில், நடிக்க முடியாது என்று வெளியேறி விட்டார், வைகைப்புயல். இதையடுத்து, அவருக்கு யாரும் படவாய்ப்பு கொடுக்கக்கூடாது என்றொரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்த நேரத்தில், வைகைப்புயலை ஆரம்ப காலத்தில் வளர்த்து விட்ட சில சீனியர் இயக்குனர்கள், வைகை புயலுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதோடு, புயல் காமெடியனை, மீண்டும் சினிமாவில் நான் நடிக்க வைக்கிறேன். யார் தடுக்கின்றனர் பார்க்கலாம்... என்று, சினிமா விழா மேடைகளில் பேசி வருகின்றனர்.
27 அக், 2018 - 00:00
டுவிட்டரில் சர்ச்சை செய்திகளை வெளியிட்டு, பரபரப்பு வளையத்திற்குள் இருந்து வரும் நான்கெழுத்து நடிகை, உச்ச நடிகரின் அரசியல் கட்சியில் இணைவதற்கு முண்டியடித்தார். ஆனால், நடிகரோ, 'நடிகைகளுக்கு தன் கட்சியில் இடமில்லை...' என்று அடித்து சொல்லி விட்டார். இதனால், அதிர்ச்சியடைந்த நடிகை, இப்போது உலக நாயகனின் கட்சியில் இடம் தரக்கோரி உரிமைப் போர் நடத்தி வருகிறார்.
20 அக், 2018 - 00:00
அகர்வால் நடிகைக்கு, 'ரொமான்ஸ்' பண்ண மட்டும் தான் தெரியும். மற்றபடி வெயிட்டான வேடங்களில் நடிக்கும் அளவுக்கு அவருக்கு திறமையில்லை என்று சில போட்டி நடிகைகள் அவரைப் பற்றி அவதுாறு பரப்பி வருகின்றனர். இந்த சேதி, அகர்வாலின் காதுக்கு எட்டியதும், செம காண்டாகி விட்டார். மேற்படி போட்டி நடிகைகளை வாய்க்கு வந்தபடி திட்டித் தீர்த்த அவர், 'நான் கதையின் நாயகியாக நடித்துள்ள படம் வரட்டும்... என்னை கிண்டல் செய்யும் அத்தனை நடிகையரும் வாயடைத்துப் போவர்...' என்று சவுண்டாக பேசுகிறார்.
20 அக், 2018 - 00:00
தளபதி நடிகருடன் நடித்த முதல் படம், வாரிசு நடிகைக்கு தோல்வியாக அமைந்தது. இருப்பினும், மீண்டும் அவருடன் இணைந்துள்ளார் நடிகை. 'இந்த படம் தனக்கு கண்டிப்பாக வெற்றிப்படமாக வேண்டும் என்பதற்காக, தன் சொந்த ஊரான கேரளாவுக்கு சென்று, சில தோஷங்கள் மற்றும் திருஷ்டி பரிகார பூஜைகள் நடத்தியுள்ளார்.
13 அக், 2018 - 00:00
ஒரு நேரத்தில் கூடுதல் சம்பளம் வாங்கிய அந்த வாரிசு இசையமைப்பாளரின் மார்க்கெட் தற்போது சரிந்து காணப்படுகிறது. அதனால், மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியாக, தன் படக்கூலியை, புதுவரவு இசையமைப்பாளர்கள் அளவுக்கு குறைத்துள்ளார். மேலும், முன் போல், மாதக் கணக்கில் இழுத்தடிக்காமல், ஒரே வாரத்திற்குள் முழு படத்திற்கான பின்னணி இசையை அமைத்து கொடுத்து, தயாரிப்பாளர்களின் செலவுகளை குறைத்து, நன்மதிப்பை பெற்று வருகிறார், வாரிசு இசையமைப்பாளர்.
13 அக், 2018 - 00:00
மூனுஷா நடித்த சில படங்கள், தொடர் தோல்விகளை சந்தித்ததால், அதை முன் வைத்து, அவரது சம்பளத்தை படிப்படியாக குறைத்து வந்தனர், தயாரிப்பாளர்கள். ஆனால், தற்சமயம், உச்ச நடிகருடன், 'டூயட்' பாடும் வாய்ப்பு கிடைத்ததால், உற்சாகமானார், நடிகை. இந்த தருணத்தை பயன்படுத்தி, மறுபடியும் படக்கூலியை பன்மடங்கு உயர்த்தி, தயாரிப்பாளர்களுக்கு பலத்த அதிர்ச்சி கொடுத்து விட்டார்.
06 அக், 2018 - 00:00
பிரபல நடிகரின் வாரிசு நடிகை, தற்போது, ஓரிரு படங்கள் தவிர, மற்றவற்றில் இரண்டாம் நாயகியாக தான் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனபோதும், படப்பிடிப்பு தளத்திற்கு வந்தால், தான், பிரபல நடிகரின் மகள் என்பதை முன் வைத்து, நடிகை பண்ணும் பந்தாக்களுக்கு அளவே இல்லை. முக்கியமாக, படப்பிடிப்பு தளங்களில், ஹீரோக்களிடம், ஹீரோயின்களை பேச விடாமல், அவர்கள் இரண்டு பேருக்கும் நடுவில் அமர்ந்து, கடலை போடுகிறார்.