கோலிவுட்டுக்கு வந்த வேகத்தில், எக்கச்சக்க பந்தாக்களை கட்டவிழ்த்து விட்டார், அந்த பாலிவுட் நடிகை. அதோடு, மும்பை ஆண் நண்பர்களை அழைத்து வந்து, 'கேரவனுக்குள்' ஆட்டம், பாட்டம் என்று, செம லுாட்டி அடித்தார். அதைப் பார்த்து, 'இந்த பாலிவுட் புயல், நம் ஊருக்கு ஒத்து வராது போலிருக்கே...' என்று அவரை ஒப்பந்தம் செய்ய, வட்டம் போட்ட தயாரிப்பாளர்கள், தெறித்து ஓடி விட்டனர். இதனால், கைவசம் உள்ள ஒரேயொரு படத்தோடு அம்மணியின் ஆட்டம், 'குளோஸ்' ஆகப் போகிறது.
19 ஜன, 2019 - 00:00
தனக்கு, 'ரெட் கார்டு' போடப் போவதாக மிரட்டிய, சண்டக்கோழி நடிகருக்கு, சரியான அதிர்ச்சி கொடுக்க, தன் நட்பு வட்டார நடிகர், நடிகையரை ஒன்று திரட்டி, ஒரு கோஷ்டி உருவாக்கியிருக்கிறார், வம்பு நடிகர். இதனால், சண்டக்கோழிக்கான எதிர்ப்பு அதிகரித்து வருவதோடு, வம்பு நடிகரின் கை ஓங்கியும் வருகிறது. இதையடுத்து, தன் பக்கமும் சில இளவட்ட நடிகர்கள் இருப்பது தான் தனக்கு நல்லது என்று, தன்னை காத்துக்கொள்ள, தானும் ஒரு கோஷ்டியை உருவாக்கி வருகிறார், சண்டைக்கோழி.
19 ஜன, 2019 - 00:00
உடற்பயிற்சி கூடம் நடத்தி வரும், 'ஸ்பைடர்' நடிகை, தன் உடம்பையும் கட்டுக்கோப்பாக பராமரித்து வருகிறார். அதன் காரணமாக, 'அவுட்டோர்' சென்றாலும், உடற்பயிற்சியில் ஈடுபடும் நடிகை, அங்கு முகாமிட்டிருக்கும் இளவட்ட நடிகர்களின் கண்ணுக்கு எட்டும் துாரத்திலேயே, 'ஜிம்னாஸ்டிக்' பயிற்சிகளை மேற்கொண்டு, தன் உடற்கட்டை கூட்டி, அவர்களை தெறிக்க விடுகிறார்.
12 ஜன, 2019 - 00:00
நாட்டாமையின் வாரிசு, வில்லியாக நடித்த இரண்டு படங்களும், அவருக்கு பெரிய பெயரை வாங்கிக் கொடுத்து விட்டதால், பெரிய நடிகையர் அளவுக்கு, படக்கூலியை தடாலடியாக உயர்த்தி விட்டுள்ளார். அதைக்கேட்டு தெறித்து ஓடும் தயாரிப்பாளர்களிடம், 'உடம்ப காட்டும் நடிகையருக்கு கொட்டி கொடுக்குற உங்களுக்கு, திறமையை காட்டுற நடிகையருக்கு கொடுக்கிறதுக்கு கசக்குதா-...' என, கேட்கிறார் நடிகை.
12 ஜன, 2019 - 00:00
இசையமைப்பாளராக இருந்து நடிகர் ஆனவர், இவர். தான் நடித்த சமீபத்திய படம் ஒன்றை தயாரிப்பாளர் சங்கம் சொன்ன தேதியில் வெளியிடாமல், வேறொரு நாளில் வெளியிட்டதால் அவருக்கு, 'ரெட் கார்டு' போடப்பட்டுள்ளது. இதனால், நடிகர் நடித்து வந்த படங்களின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. அவரை வைத்து அடுத்தபடியாக படம் இயக்க, கதை சொல்லியிருந்த இயக்குனர்கள், வேறு நடிகர்கள் பக்கம் தாவி கொண்டிருக்கின்றனர். ஆக, வேகமாக வளர்ந்து வந்த நடிகரின் மார்க்கெட், அதல பாதாளத்தில் விழுந்து விடும் அபாயத்தில் உள்ளது.
10 ஜன, 2019 - 00:00
தன் அபிமான ஹீரோக்கள், தன்னை கழட்டி விட்டதால், இரண்டாம் தட்டு, மூன்றாம் தட்டு ஹீரோக்களின் அன்புக்கு பாத்திரமாகி வருகிறார், பப்ளிமாஸ் நடிகை. அதோடு, ஆரம்பத்தில் சில இளவட்ட நடிகர்களுடன் ஒட்டாமல், உரசாமல் தள்ளி நின்று நடித்து வந்தார், நடிகை. இப்போது, தள்ளி நின்றால், அவர்களும் தன்னை தள்ளி வைத்து விடுவர் என்பதால், அவர்களே நினைத்துப் பார்க்காத அளவுக்கு கூடுதல் நெருக்கம் காட்டி, திணறடித்து வருகிறார்.
10 ஜன, 2019 - 00:00
பரதேசி நடிகருடன் அறிமுகமான அந்த ராசியான நடிகை, ஒரே நேரத்தில் இரண்டு மெகா படங்களை, 'கேட்ச்' பண்ணி விட்டார். இதே வேகத்தில் உச்ச நடிகர்களையும், 'அட்டாக்' பண்ணி விட வேண்டும் என்று அம்மணி, 'ஜெட்' வேக முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். மேற்படி, நடிகையின் இந்த அதிரடி வேகம், உச்சத்தில் இருக்கும் மற்ற கோலிவுட் நடிகையருக்கு, 'டென்ஷனை' ஏற்படுத்தியுள்ளது.
22 டிச, 2018 - 00:00
இசையமைப்பாளராக இருந்து நடிகரானவர், தொடர்ந்து சொந்த படங்களை தயாரித்ததில், சில படங்கள், அவரது கையை சுட்டு விட்டன. அதனால், இனிமேல் சொந்த படமெடுக்கப் போவதில்லை என்று முடிவெடுத்துள்ள நடிகர், தன்னை வைத்து படமெடுக்க, மற்ற தயாரிப்பாளர்கள் முன்வர வேண்டும் என்பதற்காக, சம்பளத்தை தடாலடியாக குறைத்துள்ளார்.
22 டிச, 2018 - 00:00
நடிகையின் பாலியல் புகாரில் சிக்கியுள்ள, ஆக் ஷன் கிங் நடிகர், பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தார். ஆனால், நடிகை விடுவதாக இல்லை. அதனால், சக சீனியர் நடிகர் - நடிகையரை வைத்து, நடிகையிடம் திரைக்குப் பின் சமாதான பேச்சை துவக்கினார். நடிகை, அதற்கும் அடங்கவில்லை. அதனால், இதுவரை மனிதர்களை நம்பிய நடிகர், தற்போது, கோவில்களுக்கு சென்று, இந்த பிரச்னையில் இருந்து தன்னை விடுவிக்குமாறு, தெய்வங்களிடம் சரணடைந்துள்ளார்.
15 டிச, 2018 - 00:00
திருமணத்திற்கு பின்னரும் நடித்து வரும், பாணா காத்தாடி நடிகை, போக்குவரத்து விதிகளில் ஒன்றின் பெயருள்ள படத்தில், கதையின் நாயகியாக நடித்திருந்தார். ஆனால், அப்படம் ஊத்திக்கொண்டது. அதனால், அவருக்கு ஏற்கனவே கதை சொல்லி இருந்தவர்கள், தெறித்து ஓடி விட்டனர். இதோடு, கதையின் நாயகி கனவு கலைந்து விடக்கூடாது என்பதற்காக, சில அபிமான தயாரிப்பாளர்களை தனக்காக பைனான்ஸ் செய்யுமாறு துரத்தி வருகிறார், நடிகை.
15 டிச, 2018 - 00:00
இரண்டாம் இடத்துக்கு இறங்கி விட்டபோதும், தொடர்ந்து மேல்தட்டு நடிகர்களுடன், 'டூயட்' பாட தீவிரம் காட்டுகிறார், அகர்வால் நடிகை. அதோடு, முன்பெல்லாம் நள்ளிரவு விழாவுக்கு அழைத்தால், 'நான் ஆச்சாரமான பொண்ணு...' என்று சொல்லி, 'எஸ்கேப்' ஆகி வந்த நடிகை, இப்போது, முன்னணி இயக்குனர்கள், நடிகர்கள் வருகின்றனர் என்றால், அழையா விருந்தாளியாகவே ஆஜராகி, 'பார்ட்டி'யில் ஐக்கியமாகி விடுகிறாராம்.
15 டிச, 2018 - 00:00
வில்லியாக கலக்கி வரும் அந்த வாரிசு நடிகை, படப்பிடிப்பு தளங்களில் எந்நேரமும் ஓயாத அரட்டை தான். காதுகளில் ரத்தம் வழியும் அளவுக்கு, வாயை திறந்தால் மூடாமல், எப்.எம்., ரேடியோ போன்று வாயாடி வருகிறார். இதனால், தங்கள் அருகில் அவர் வந்து அமர்ந்தாலே, அப்படங்களின் நடிகர் - நடிகையர், காதுகளை பொத்தி, ஓட்டம் பிடிக்கின்றனர்.