கிரீன் சேனல் எண்டர்டெயின்மென் படநிறுவனம் சார்பாக சகாதேவன் தயாரிக்கும் புதியபடம் நண்பர்கள் கவனத்திற்கு. இப்படத்தின் நாயகனாக குளிர் 100 பட நாயகன் சஞ்சீவ் நடிக்க அவருக்கு ஜோடியாக கம்பீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மனிஷாஜித் ஹீரோயினாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக ஜெயமணியின் மகன் வர்ஷயனும் அறிமுகமாகிறார். இவர்களுடன் ராஜ்கபூர், மகாதேவன், தலைவாசல் விஜய், டாக்டர் சூரி, சங்கர், தெனாலி, அழகப்பன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
நட்புக்கும், காதலுக்கும் இடையில் உள்ள உணர்வை பிரதிபலிப்பது தான் நண்பர்கள் கவனத்திற்கு படத்தின் கதை. டைரக்டர் ஆர்.வி.உதயகுமாரிடம் உதவியாளராக இருந்த கே.ஜெயக்குமார் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். சினேகனின் பாடல்வரிகளுக்கு பிரம்மா இசையமைக்க, பால் லிவிங்ஸ்டன் ஒளிப்பதிவு செய்கிறார்.
படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு சிதம்பரம், கொள்ளிடம், மாயவரம், தரங்கம்பாடி, சென்னை உள்ளிட்ட இடங்களிலும் நடைபெற இருக்கிறது.