முற்றிலும் புதியவர்களை கொண்டு எடுக்கப்பட்ட படம் செய்வது சரியே. இன்றைய சமுதாயத்தில் பெரிதும் நடக்கும் காதல், நடப்பு மற்றும் துரோகம் ஆகியவற்றால் ஏற்படும் விளைவுகளே படத்தின் கதை. ட்ரீம்ஸ் சினிமாஸ் சார்பில் பாலமுருகன் இப்படத்தை தயாரிக்கிறார். துரை கார்த்திகேயன் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். படத்தில் புதுமுகங்கள் அர்ஜீன், நீலம் ஆகியோர் கதாநாயகன், கதாநாயகிகளாக நடிக்கின்றனர். டி.எஸ்.முரளிசுப்ரமணியம் படத்திற்கு இசையமைக்கிறார். சென்னை மற்றும் அதனை சுற்றியே பெரும்பான்மையான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. சென்னையில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சிறப்பு அனுமதி பெற்று, பெரும்பான்மையான இடங்களை படத்திற்கு ஏற்றாற்போல் ஆர்ட் டைரக்டர் சேகர் மாற்றி அமைத்து ஹோட்டல் ஊழியர்களை குழப்பம் அடைய செய்திருக்கின்றார். படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது.