ஆஸ்மி பிலிம்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பாக சிராஜுதீன் தயாரிக்கும் படம் ‘மின்னல்’. இப்படத்தில் ஆதவன் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் 8 பேக் உடற்கட்டுடன் இப்படத்தில் அறிமுகமாகிறார். கதாநாயகியாக அங்கனா நடிக்கிறார். படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சிக்காக உடலை வருத்தி, தன் முதல் படத்திலேயே 8 பேக் உடற்கட்டுடன் அறிமுகமாகிறார் ஆதவன். இவர்கள் தவிர முக்கிய வேடத்தில் அபிநய் நடிக்கிறார். வில்லனாக மகியும், முக்கிய வில்லன் வேடத்தில் பாலாபட், எஸ்.டி.சாமி மற்றும் சாய்பிரியா, ரம்யா, பாண்டியராஜன், தலைவாசல் விஜய், லதாராவ், சிசர் மனோகர், எலிசபெத், சிவநாராயணமூர்த்தி மற்றும் வெங்கல்ராவ் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு விமல் ஜேக்கப் இசையமைக்க, நாககிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் சிராஜ்.
இப்படம் பற்றி இயக்குனரிடம் கேட்டபோது, இது பக்கா காமர்ஷியல் படம். காமெடி, காதல், ஆக்ஷன், திரில்லர் போன்ற எல்லா அம்சங்களும் இதில் அடங்கும். ஆதவன் நிச்சயம் நல்லா வருவார் என்றார்.