துணிச்சலான கேரக்டரில் நடிக்கும் கோமலி பிரசாத் | 2026ல் அதிகப் பார்வைகளைப் பெற்ற 'முட்ட கலக்கி' பாடல் | ராம் பொதினேனி இயக்கும் படம் எந்த மாதிரியான கதை | படப்பிடிப்புக்கு வருவதை நிறுத்திய ரவி மோகன் | 101 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'பெத்தி' டிரைலர் | புதைத்த நாயை தோண்டி எடுத்த ஷாருக்கான் | பிளாஷ்பேக் : விதவை மறுமணத்தை துணிச்சலாக பேசிய விசு | தயாராகி 40 ஆண்டுகள் ஆன நிலையில் கேன்ஸ் விழாவில் பாராட்டுகளை குவித்த மலையாள படம் | நிலத்தகராறு பின்னணியில் உருவானது தான் 'திரிஷ்யம்' படத்தின் கதை ; இயக்குனர் ஜீத்து ஜோசப் | மலையாளத்தில் நுழைந்த ரித்திகா சிங், அமைரா தஸ்தூர் |

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் முதல் சீசனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அன்ஷூ ரெட்டி. ஜெயா டிவியில் கோபுரங்கள் சாய்வதில்லை தொடரில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார். தொடர்ந்து தெலுங்கில் பல சீரியல்களில் நடித்து தென்னிந்தியாவின் முன்னணி சின்னத்திரை நடிகையாக பிரபலமாகியுள்ளார்.
இந்நிலையில் சௌமித் ரெட்டி என்பவருடன் அன்ஷூ ரெட்டிக்கு கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இவர்களது திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் ரசிகர்களும், பிரபலங்களும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.