Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

விஜய் மியூசிக்: உதயமாகிறது புதிய இசை சேனல்

30 செப், 2020 - 17:01 IST
எழுத்தின் அளவு:
VIJAY-MUSIC-CHANNEL

குறுகிய காலத்தில் வேகமான வளர்ச்சியை பெற்ற சேனல் விஜய். புதுமையான நிகழ்ச்சிகள், பிரமாண்ட தொடர்கள் மூலம் முன்னணி சேனல்களை பின்னுக்கு தள்ளி விட்டு முன்னேறியது. பிக் பாஸ், நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என பிரமாண்ட நிகழ்ச்சிகளையும் நடத்தியது.


விஜய் டி.வியின் காமெடி நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் இப்போது பெரியதிரையில் நடிகர்களாகி இருக்கிறார்கள். இசை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் பாடகர்களாகி இருக்கிறார்கள். நிகழ்ச்சியை இயக்கியவர்கள் சினிமா இயக்குனர்களாகி இருக்கிறார்கள். விஜய் டிவி ஒரு சில வருடங்களுக்கு முன்பு விஜய் சூப்பர் என்ற பெயரில் புதிய சேனலை அறிமுகப்படுத்தியது. முழுக்க முழுக்க திரைப்படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு தமிழ் திரைப்படங்களை தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறது.


இந்த நிலையில் வருகிற அக்டோபர் 4ம் தேதி விஜய் டிவி-யின் மற்றுமொரு புதிய சேனலான "விஜய் மியூசிக்" என்ற சேனலை அறிமுகப்படுத்தபட உள்ளது. ஏற்கெனவே இந்த சேனலின் முன்னோட்டம் சில மாதங்களுக்கு முன்பே தொடங்கி விட்டது. முறைப்படியான ஒளிபரப்பு அக்டோபர் 4ந் தேதி முதல் ஒளிபரப்பாகும் என்று தெரிகிறது. ஆனால் இந்த சேனல் பற்றிய முறையான அறிவிப்பு எதையும் விஜய் டி.வி., வெளியிடவில்லை.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
"அபூர்வ ராகங்கள், மருதமலை, வேதாளம்...." - இன்றைய டிவி திரைவிருந்து"அபூர்வ ராகங்கள், மருதமலை, ... தோழியின் தற்கொலை வழக்கில்: லட்சுமி புரமோத்துக்கு முன் ஜாமீன் தோழியின் தற்கொலை வழக்கில்: லட்சுமி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

NRI - Chennai,இந்தியா
01 அக், 2020 - 04:29 Report Abuse
NRI Anti Hindu Channel
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in