Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

புதிய நாகினி அறிமுகம்

26 ஜூலை, 2020 - 13:33 IST
எழுத்தின் அளவு:
Hina-khan-as-nagini

இந்தியில் சூப்பர் ஹிட்டான டி.வி தொடர் நாகினி. இது தமிழில் நாகினி என்ற பெயரில் டப் ஆகி ஒளிபரப்பானது. இதன் முதல் சீசனில் மௌனி ராய் நடித்திருந்தார். பாம்பு கதை பெண்கள், குழந்தைகளுக்குப் மிகவும் பிடித்துப் போக தொடர்ந்து இந்த சீரியலை மக்கள் ஆர்வமாகப் பார்த்து வருகின்றனர்.

நாகினி 4ம் சீசன் ஒளிபரப்பாகி வந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக இதன் ஷூட்டிங், தடைபட்டிருந்தது. நான்காவது சீசனில் நியா ஷர்மா, விஜயேந்திர குமேரியா, அனிதா ஹசனந்தனி ஆகியோர் முன்னணி கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். நாகினி 4 தொடர் விரைவில் முடிவடைய இருக்கிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக இதை அவசரமாக முடிப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்போது, நாகினி 5 சீசனின் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. நாகினியாக நடிப்பவரின் கண்கள் மட்டும் தெரிவது போல இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. என்றாலும் அடுத்த நாகினி ஹினா கான்தான் என்று ரசிகர்கள் கண்டுபிடித்து விட்டார்கள். நாகினி 4 சீசனிலேயே ஹினா கான் நாகினியாக நடிக்க வேண்டி இருந்தது. கால்ஷீட் பிரச்னையால் அது முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீரை சேர்ந்த ஹினா கான், இந்தி பிக் பாஸ் 11வது சீசனில் கலந்து கொண்டவர், சில இந்தி தொடர்களில் நடித்தவர், ஹேக்டு என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார். தற்போது வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சித்தி 2: இனி அவர்களுக்குப் பதில் இவர்கள் தான்!சித்தி 2: இனி அவர்களுக்குப் பதில் ... டைட்டில் அதே.. ஆனால் புதிய கதைக்களம்! டைட்டில் அதே.. ஆனால் புதிய கதைக்களம்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in