Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

எங்களுக்கும் உதவுங்கள்: சின்னத்திரை கலைஞர்கள் கோரிக்கை

27 மார், 2020 - 11:22 IST
எழுத்தின் அளவு:
Chinnathirai-actors-also-seeks-Help

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த 19ந் தேதி முதல் சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் சின்னத்திரை கலைஞர்களும் வேலை இழந்துள்ளனர். தற்போது திரைப்பட கலைஞர்கள் பெப்சிக்கு தாராளமாக நிதியும், அரிசியும் வழங்கி வருகிறார்கள். தென்னிந்திய நடிகர் சங்கமும் நிதி கேட்டு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

இந்த நிலையில் தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பும் எங்களுக்கும் உதவி செய்யுங்கள் என்று கேட்டிருக்கிறது. இது தொடர்பாக கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

உலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரசால் சின்னத்திரை உலகமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால் இந்த தொழிலையே நம்பி வாழும் உதவி இயக்குனர்கள், இயக்குனர்கள், நடிகர்கள், எழுத்தாளர்கள், படத் தொகுப்பாளர்கள், ஒலிப்பதிவாளர்கள், மிகவும் பாதிக்கப்பட்டு அன்றாட தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருகிறார்கள்.

பெரிய திரையை சேர்ந்த பல தயாரிப்பாளர்கள், நடிகர்கள் பெப்சி மூலமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வருவது ஆறுதலாக இருக்கிறது. அதேபோல சின்னத்திரையை மட்டுமே நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வேதனையை குறைக்க எங்களுக்கும் பண உதவியோ, பொருளுதவியோ செய்தால் செய்தால் இந்த இக்கட்டான நேரத்தில் பேருதவியாக இருக்கும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மாங்கல்யா தோஷம்: புதிய தொடர்மாங்கல்யா தோஷம்: புதிய தொடர் நிறுத்தப்படும் டிவி தொடர்கள்? நிறுத்தப்படும் டிவி தொடர்கள்?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

LAX - Trichy,இந்தியா
29 மார், 2020 - 04:12 Report Abuse
LAX . தமிழகத்தில் எவ்வளவோ பேர் திறமை இருந்தும் வாய்ப்புகளற்று ஏங்கியிருக்க.. பிழைப்புக்கு வழியின்றி தவித்திருக்க.. தமிழ் சீரியல்களில் நடிப்பதற்கு கூட ஏன் வெளி மாநிலத்தவர்களை பயன்படுத்த வேண்டும்.. பெரியதிரை ஆட்கள் தான் ஏகத்துக்கும் ஆடுறாங்கன்னா.. சின்னத்திரை கூடுதலாகவே ஆட்டம் போடுகிறதே இந்த விஷயத்தில்.. பாஷையே தெரியாம வாயசச்சதுக்கு ஒவ்வொரு சேனல்களும் அவர்களுக்கு 'அவார்ட்?? ' வேற வழங்குது.. அது சரி அவார்ட் க்கெல்லாம் இப்ப ஏது மதிப்பு.. எப்ப தெருவுக்குத் தெரு, வீட்டுக்கு வீடு அவார்ட் குடுக்க ஆரம்பிச்சாங்களோ.. அப்பவே எல்லா மதிப்பும் மரியாதையும் போயே போச்சு..
Rate this:
LAX - Trichy,இந்தியா
29 மார், 2020 - 04:01 Report Abuse
LAX நீங்களும் மனிதர்கள் தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.. ஆனா, பல குடும்பங்கள் வீட்டுக்கே சென்று சீரழித்த சாபம்.. உங்களையெல்லாம்.. இப்பொழுதுதான் (நேற்றிலிருந்து) இந்தச் சமூகம் மெல்ல மீளும் நிலைக்கு திரும்பும் பாதை தெரிய ஆரம்பித்திருக்கிறது.. நீங்களெல்லாம் ஏதாவது நல்ல பிழைப்பை ஏற்படுத்திக்கோங்க.. வயிற்றுப் பிழைப்புக்காக உடலை அடமானம் வைத்துப் பிழைக்கும் தொழிலைவிட மிகவும் கேவலமானது நீங்களெல்லாம் கூடிக் கெடுக்கும் இந்தத் தொழில்.. தயவு செய்து மாற்றுப் பாதையில் பயணிக்கப் பாருங்க.. இதுவே 'COVID-19' உங்களுக்கெல்லாம் கற்றுக்கொடுத்த பாடமாக அமையட்டும்.. Please.. Please..
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
28 மார், 2020 - 16:26 Report Abuse
skv srinivasankrishnaveni sinithuraile palakodeekal vaangkuraangka heeros and heeroins aanaal siruvedangkalil nadikkum pal nadikaalukku tharumpothu pisinaat=riththanamaa irukkaanungka kaadanaivaangkipaadam edukkumpothu ennaadhukkuyya daambeegam ithellaam thaan anaaavaasiya silavu
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
27 மார், 2020 - 12:22 Report Abuse
Bhaskaran டெச்னிஸிங்களுக்கு உதவலாம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in