Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

படப்பிடிப்புகள் நிறுத்தம் - கலக்கத்தில் டிவி சீரியல்கள்

21 மார், 2020 - 10:51 IST
எழுத்தின் அளவு:
Tv-serial-shooting-spot-cancel

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்கள், தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்கள் வரும் 31ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன. மேலும் வரும் 22ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு நிலையை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையையொட்டி தமிழ் திரைப்பட படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறுத்தப்பட்டுவிட்டன. இந்நிலையில் சின்னத்திரை சீரியல்களின் படப்பிடிப்புகளையும் நிறுத்தப்பட்டுள்ளது. சில டிவி சேனல்கள் படப்பிடிப்பு நிறுத்தப்படும் என தெரிந்த உடனே இரவு பகலாக வெவ்வேறு செட்டுகளில் உதவி இயக்குனர்களை வைத்து படப்பிடிப்பை நடத்தி உள்ளனர். இதனால் மார்ச் 31வரை டிவி சீரியல்கள் ஒளிப்பரப்பாகும் என தெரிகிறது. அதன்பின்னர் படப்பிடிப்பு ரத்து நீடித்தால் சிக்கல் நீடிக்கும் என தெரிகிறது. இதனால் சின்னத்திரை நட்சத்திரங்கள் மற்றும் டிவி சீரியல்கள் நிறுவனங்கள் மற்றும் டிவி சேனல்கள் என்ன செய்வது என புரியாமல் கலக்கத்தில் உள்ளனர்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
நீலிமா ராணியின் என்றென்றும் புன்னகைநீலிமா ராணியின் என்றென்றும் புன்னகை மாங்கல்யா தோஷம்: புதிய தொடர் மாங்கல்யா தோஷம்: புதிய தொடர்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

N.Purushothaman - Cuddalore,இந்தியா
25 மார், 2020 - 15:59 Report Abuse
 N.Purushothaman ஆண்களுக்கு கொண்டாட்டம் ...பெண்களுக்கு திண்டாட்டம் ...சீரியல்கள் இல்லாமல் இருந்தாலே போதும் ....மன உளைச்சல்கள் இல்லாமல் பெண்கள் நிம்மதியாக இருப்பார்கள் ...
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
24 மார், 2020 - 17:20 Report Abuse
Mirthika Sathiamoorthi அதென்ன சாத்தியமா புரியலை...நாம பாக்கறதை நிறுத்திட்டாளே எல்லாம் நின்னுடப்போவுது...மேல் நாட்டில் அடல்ட்ஸ் ஒன்லி மாதிரியான நிர்வாண காட்சிகள் நிறைந்தபடங்கள் வரும்...அதுபோல தமிழ்நாட்டில் ஏன் வருவதில்லை…? ஏன்னா பாக்க யாரும் தெயட்டருக்கு வரமாட்டாங்க...பிட் படம் சொல்லிட்டு போயிட்டே இருப்பங்கா..அந்த பட நடிகர் நடிகைக்கும் ஆப்பு...இதனாலே அந்த மாதிரி படங்கள் வர்றதே இல்லை..சீரியலும் அப்புடியே பாக்கறதை நிப்பாட்டிடுங்க...எடுக்கறதும் நின்னுடும்....நாங்க நிப்பாட்ட மாட்டோம் நீ நிப்பாட்டுங்கறது எந்த ஊரு நியாயம்? காமெடி, மூவீ, மியூசிக், அனிமேஷன், செய்தி... ஏன் பக்தி சேனல் கூட இருக்கிறப்ப டிவி செரியாலதான் பாப்போம்...நாங்க நிப்பாட்ட மாட்டோம் நீக்க நிப்பாட்டுங்க….ஹஹஹஹஹ் என்னோட பாவாடை கிளிஞ்சிருந்தது தப்பில்லை பக்கத்து வீட்டுக்காரன் சிரிச்சது தப்பு...அப்படித்தானே?
Rate this:
LAX - Trichy,இந்தியா
23 மார், 2020 - 12:36 Report Abuse
LAX கிருமிகளை விடக் கொடியது.. குடும்பங்களில் குற்றங்களை அதிகரிக்கச் செய்வது.. அப்படியே நிரந்தரமாக நிறுத்தப்படட்டும்..
Rate this:
natarajan s - chennai,இந்தியா
23 மார், 2020 - 08:04 Report Abuse
natarajan s சில நாட்களுக்கு குடும்பத்தில் அமைதி சமாதானம் நிலவும்.
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
22 மார், 2020 - 19:41 Report Abuse
Bhaskaran குட்டி நடிகைகளுக்கு பாதிப்பு வராது .டெச்னிஸிங்களுக்கு தான் பிரச்னை
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in