Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

அரண்மணை கிளி தொடர் - நீலிமா ராணி விலகல்

18 மார், 2020 - 11:46 IST
எழுத்தின் அளவு:
Neelima-Rani-out-from-Aranmanai-Kizhi-serial

தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தவர் நீலிமா ராணி, அதன் பிறகு பாண்டவர் பூமி, ஆல்பம், விரும்புகிறேன் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். பிறகு ஹீரோவின் தங்கை, ஹீரோயின் தோழியாக நடிக்க ஆரம்பித்தார். ஆனால் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்வில்லை. பண்ணையாரும் பத்மினியும் படத்தில் பெரிய கேரக்டரில் நடித்திருந்தார்.

சின்னத்திரை தொடர்களில் நடிக்க ஆரம்பித்தவர் அங்கு பிசியான நடிகை ஆனார். இதுவரை தென்னிந்திய மொழிகளில் 30க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளார். ராதிகா சரத்குமாரின் ராடான் டி.வியின் அனைத்து தொடர்களிலும் நடித்திருக்கிறர். நிறம் மாறாத பூக்கள் என்ற தொடரை தயாரிக்கவும் செய்தார்.
கடைசியாக அரண்மணை கிளி தொடரில் நடித்து வந்தார். இது விஜய் டி.வியில் ஒளிபரப்பாகிறது. இதில் சூர்யதர்ஷன், மோனிஷா ஆர்ஷிக் ஹீரோ, ஹீரோயின். இதில் துர்கா ராகவன் என்ற முக்கியமான கேரக்டரில் நடித்து வந்தார் நீலிமா ராணி. 2018-ம் ஆண்டிலிருந்து இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் திடீரென்று அரண்மனை கிளி தொடரிலிருந்து நீலிமா ராணி விலகியிருக்கிறார். இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

இது தொடர்பாக நீலிமா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் எழுதியிருப்பதாவது: கேமராவின் முன்னால் நிற்கும்போது நான் மிகவும் மகிழ்ச்சியான நபராக இருக்கிறேன். என்னுடைய குழந்தைப் பருவத்திலிருந்தே நான் நடித்து வருகிறேன். தற்போது வாழ்க்கை சில பல மாற்றங்களைக் கோருகிறது. நான் அதை ஆர்வத்துடனும், ஆச்சரியத்துடனும் வரவேற்கிறேன். போய் வா துர்கா, நான் உன்னை மிஸ் செய்வேன். ரசிகர்களோ, நண்பர்களோ எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம், நீங்கள்தான் எனது பலம். எனக்காகப் பிரார்த்தனை செய்து என்னை வாழ்த்துங்கள். என்று தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் டி.வியின் புதிய தொடர் பாக்யலட்சுமிவிஜய் டி.வியின் புதிய தொடர் ... நீலிமா ராணியின் என்றென்றும் புன்னகை நீலிமா ராணியின் என்றென்றும் புன்னகை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Bhaskaran - Chennai,இந்தியா
22 மார், 2020 - 18:03 Report Abuse
Bhaskaran அப்பாடா இனி யாருக்கும் கொரானா வராதா
Rate this:
saravanan - NAMAKKAL ,இந்தியா
19 மார், 2020 - 12:14 Report Abuse
saravanan இதையெல்லாம் ஒரு செய்தியா போட எப்படி மனசு வருது . வேதனையா இருக்கு.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in