Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

சித்தி 2வில் பாக்யராஜ்

12 அக், 2019 - 13:55 IST
எழுத்தின் அளவு:
Bhagyaraj-in-Chithi-2

ராதிகா தயாரித்து, நடித்த சித்தி, சின்னத்திரை தொடர்களில் பல சாதனைகளை படைத்தது. தற்போது அதன் 2ம் பாகத்தை ராதிகா தனது ராடான் டி.வி மூலம் தயாரித்து, நடிக்கிறார். முதல் பாகத்தை சி.ஜே.பாஸ்கர் இயக்கினார். 2ம் பாகத்தை சுந்தர் கே.விஜயன் இயக்குகிறார். இதில் ராதிகாவுடன் முதல் பாகத்தில் நடித்த பெரும்பாலானவர்கள் நடிக்கிறார்கள்.

2ம் பாகத்தில் ராதிகாவின் கணவராக கே.பாக்யராஜ் நடிக்க இருக்கிறார். பாக்யராஜ் சின்னத்திரைக்கு புதிதில்லை. பல நிகழ்ச்சிகளில் பங்கேற்பாளராக, நடுவராக இருந்திருக்கிறார். ஆனால் நடிப்பது இதுவே முதல் முறை. சித்தி முதல் பாகத்தில் சிவகுமாருக்கு இருந்த முக்கியத்துவம் 2ம் பாகத்தில் கே.பாக்யராஜுக்கு இருக்கும் என்று தெரிகிறது.

கே.பாக்யராஜ் 5க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். சித்தி 2 படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு வருகிறார். கையில் இருக்கும் படத்தை முடித்துக் கொடுத்து விட்டு முழுக்க முழுக்க சித்தியில் கவனம் செலுத்த இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சின்னத்திரைக்கு வந்தார் சாந்தினிசின்னத்திரைக்கு வந்தார் சாந்தினி சஞ்சீவ், பிரியங்கா நடிக்கும் காற்றின் மொழி சஞ்சீவ், பிரியங்கா நடிக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
16 அக், 2019 - 17:12 Report Abuse
Vasudevan Srinivasan தமிழ் திரையுலகில் எம்ஜியார் - சிவாஜி, ரஜினி - கமல் என்று ஒரு போட்டி (ஆரோக்கியமான போட்டி) உண்டு அதே போல் கே. பாக்யராஜ் - டி. ராஜேந்தர் என்று ஒரு போட்டியும் இருந்தது ஆனாலும் இருவரது படங்களும் நல்ல வசூல் பார்த்தது இருந்தாலும் பாக்யராஜ் சாரின் படங்கள் இன்றைய தலைமுறை ரசிகர்களும் ரசித்து பார்க்கிறார்கள் ஆனால் ராஜேந்தர் அவர்களது படங்களை நாற்பது கடந்த சிலரே ரசிக்கிறார்கள் என்பது உண்மை.. இதை நான் சொல்வதற்கு காரணம் சமீபத்தில் யூட்யூபில் ஒரு பேட்டியில் மீண்டும் படங்களை இயக்க துவங்கப்போகிறேன் என்று சொல்லியிருந்த பாக்யராஜ் சார் இப்படி பாதை மாறுகிறாரே என்பது வருத்தம்தான்.. ஆனாலும் வெற்றியாளர் எங்கு சென்றாலும் வெற்றிதான் ..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in